பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890

பன்னிரு திருமுறை வரலாறு


திருநாவுக்கரசர் காலத்தில் தமிழ்நாட்டில் மாடக் கோயில்’ என்னும் அமைப்புடைய பெருங்கோயில்கள் எழுபத்தெட்டிருந்தன. இப் பெருங்கோயில்களே யன் றிக் கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என வழங்கும் அமைப்புடைய கோயில்களும் ஆங்காங்கே நிறுவப் பெற்று வழிபாடு செய்யப்பெற்றன. இச்செய்தி,

'பெருக்காது சடைக்கணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினேடெட்டும் மற்றுங் கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்

கருப்பறியல் பொருப்பனேய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்

இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்த்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே”

{6–71–5] என வரும் திருத்தாண்டகத்தாற் புலம்ை. இதன் கண் அப்பரடிகள் குறித்த எழுபத்தெட்டுப் பெருங் கோயில் களுள் எழுபது பெருங்கோயில்கள் கோச்செங்கட் சோழராற் கட்டப்பெற்றவை யென்பது, மேற்குறித்த திருமங்கையாழ்வார் அருளிச்செயலால் நன்கு விளங் கும். எஞ்சிய பெருங் கோயில்கள் எட்டும் கோச் செங்கட் சோழர்க்குப் பின்வந்த தமிழ்மன்னர்களால் நிறுவப்பெற்றன வாதல் வேண்டும். இவ்வாறு சங்க காலத் தமிழ் வேந்தர்களால் சுடு மண்ணுகிய செங் கல்லும் சாந்தும் கொண்டு அமைக்கப்பெற்ற இப் பெருங்கோயிலமைப்பு முறையே, அவர்க்குப்பின் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு தொண்டை நாட்டை ஆட்சிபுரிந்த மகேந்திரவர்மன், நரசிங்க வர்மன், இராசசிம்மன் முதலிய பல்லவ மன்னர்களால் மலேகளைக் குடைந்தும், பாறைகளைப் பிளந்து அடுக்கி யும் அமைக்கப் பெற்ற கருங்கற் கோயில்களுக்கு முன் மாதிரியாக இருந்ததெனக் கருதுதல் பொருந்தும்.