பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/913

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள் 895

குறிக்கப் பெற்றுள்ள திருத்தலங்கள் வைப்புத்தலங் கள்' என வழங்கப்பெறுவன.

இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தேவாரத் திருப்பதிகங்களில் தமக்கெனத் தனிப்பதிகம் பெற் றுள்ள பாடல் பெற்ற தலங்களாக இரு நூற்றெழுபத்து நான்கு தலங்கள் உள்ளன. அவற்றுள் சோழநாட்டுத் தலங்கள் 190, ஈழநாட்டுத் தலங்கள் 2, பாண்டிநாட் டுத் தலங்கள் 14, மலே நாட்டுத்தலம் (சேரநாட்டுத் தலம்) 1, கொங்குநாட்டுத் தலங்கள் 7, நடுநாட்டுத் தலங்கள் 22, தொண்டைநாட்டுத்தலங்கள் 32. துளு நாட்டுத்தலம் 1, டநாட்டுத்தலங்கள் 5 ஆகப் பாடல் பெற்ற திருத்தலங்கள் 274 ஆகும். இங்கே குறித்த இரு நூற்றெழுபத்து நான்கு தலங்களேயும் தொகுத்துக் கூறும் முறையில் உமாபதி சிவாசாரியார் திருப்பதிக் கோவை’ என்ற நூலே இயற்றியுள்ளார். அந்நூலில் சோழநாட்டுத்தலங்களேக் காவிரிக்கு வடகரையிலுள்ள தலங்கள் எனவும் தென்கரையிலுள்ள தலங்கள் என வும் இரு வகையாகப் பகுத்து, வடகரைத் தலங்கள் 68 என வும், தென்கரைத்தலங்கள் 127 எனவும் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம்.

தேவாரத் திருப்பதிகங்களிற் குறிக்கப்பட்ட திருத் தலங்கள், அவை அமைந்துள்ள குறிஞ்சி, முல்லே, மருதம், நெய்தல் ஆகிய நில அமைப்புப்பற்றியும், அவற்றில் மிகுந்துள்ள கருப்பொருள்பற்றியும், அங்கு வழிபட்டோர் பெயரொடு அமைந்த திருக்கோயில் பற்றியும் பெயரிடப் பெற்று வழங்குகின்றன.

குறிஞ்சி நிலத்தில் அமைந்த தலங்கள் மலே, குன்றம், அறை, பருப்பதம் என்ற பெயர்களாலும்; முல்லே நிலத்தலங்கள் காடு, வனம். பாடி என்ற பெயர் களாலும், மருத நிலத் தலங்கள் ஊர், ஆறு, துறை முதலிய பெயர்களாலும்; நெய்தல் நிலத் தலங்கள்,