பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பன்னிரு திருமுறை வரலாறு


நற்றவத்தாற் ருேன்றிப் பரமனேப் பத்தி பண்ணும் தொண்டராகிய சீகாழிப் பிள்ளே யார்க்குச் சிவபெரு மான் உமாதேவியாருடன் விடைமேல் எழுந்தருளிச் சிவஞானம் வழங்கினன் என்னும் இவ்வரலாறு, முற்செய்தவ விசேடத்தினுற் சாமு சித்தராய்ப் பிறந்து வீடுகாதலிக்குஞ் சிவபத்தரை விஞ்ஞானுகலர் பிரளயா கலரைப் போலக் கொண்டு நூல்வழியானன் றித் தானே சிவகதியிற் சேர்த்தற்பொருட்டுச் சிவ பெரு மான் எளிவந்து அருள் புரிவன்' என்னும் மெய்ந் நூற்றணிபுக்கு ஏற்ற இலக்கிய மாதல் தெளிக,

திருஞானசம்பந்தப் பிள்ளே யார் ஞானப்பாலுண்டு முதன் முதற் பாடியதெனக் கூறப்படும் தோடுடைய செவியன் என்ற திருப்பதிகம், தந்தையை நோக்கி மைந்தன் கூறிய மொழியாக அமையாது, பிரமபுரத் துறையும் பெம்மாளுகிய உள்ளங்கவர் கள் வனே நினேந்திரங்கும் தலேமகள் கூற்றக அமைந்திருத்த லால், முனிவுற்ற தாதையாருக்கு இளமகளொருத்தி தன் நிறையழிய வளைசோர உள்ளங்கவர்ந்த கள்வனேக் காட்டி இவனே அவன் ’ எனக் கூறினு ளென்பது நெறியாகாதென்றும், பொற்கிண்ணத் தடி சில் பொல்லாதெனத் தாதையார் முனிவுற்ற எல்லேயிலே திருஞான சம்பந்தப் பிள்ளேயார் பாடிய திருப்பதிகம் வேருென்ருய் இருக்கலாமென்றுங் கூறுவ துண்டு.”

தோடுடைய செவியன் என்னும் இத் திருப்பதிகம், பாலூட்டி யருள்புரிந்த பெருந்தகை இவனே எனத் தந்தையார்க்குச் சுட்டிக்காட்டுமளவில் நில்லாது உமையம்மையாரளித்த ஞான வாரமுதத்தைத் தாம் பருகிய நிலையிற் பெற்ற சிவா நுபவ இன் பத்தினைப்

4

1. பண்டை நற்றவத்தாற்றேன்றிப் பரமனைப் பத்தி

பண்ணுந் தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்

பன் ? -சிவஞானசித்தியார், சுபக்கம் 4-ஆம் பாடல்

2 தழிழ்ப்பொழில் 16-ஆம் துனர் பக்கம் 335-341.