பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

பன்னிரு திருமுறை வரலாறு


தொழுதுலகில் இழுகுமல மழியும்வகை

கழுவுமுரை கழுமல நகர்ப் பழுதிலிறையெழுதுமொழி தமிழ்விரகன்

வழிமொழிகள் மொழிதகையவே.

என வரும் வழிமொழித் திருவிராகமாகிய திருப்பதி கத்தின் திருக்கடைக்காப்பில் இனிது விளக்கியுள்ளார். சிவபெருமானுேடு இரண்டறக் கலந்த உரோமச முனி வர் மீண்டும் திருஞானசம்பந்தராக இவ்வுலகிற் பிறந்: தாரெனக் கூறுதல், சிவஞானச் செல்வராகிய ஆளு டைய பிள்ளேயார் வாய்மொழிக்கும் சைவசமயத்தவர் கள் கூறும் மீண்டுவாரா வழியாகிய வீடுபேற்றின் இயல்புக்கும் முற்றும் முரணுமாதலின் புலவர் புராண முடையார் கூற்று சிறிதும் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்: பந் தன் என வும் கழுமல முதுபதிக் கவுணியன்’ என வும் ஆளுடையபிள்ளேயார் தாம் பிறந்தருளிய ஊர், குலம், கோத்திரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுதலாலும் கழுமலநாதன் கவுணியர் குலபதி என நம்பியாண்டார் நம்பி பிள்ளையாரைப் போற்றுத லாலும் சீகாழிப் பதியில் வேதியர் மரபி. ல கவுணிய, கோத்திரத்திலே பிறந்தருளியவர் திருஞானசம்பந்தப் பிள்ளே யாரென்பது நன்கு தெளியப்படுமென் க.

பொற்ருளம் பெறுதல்

உமையம்மையார் அளித்த பாலடி சிலுண்டு திரு. நெறிய தமிழ் பாடிய திருஞான சம்பந்தப் பிள்ளே யார் தமது திருமாளிகையை யடைந்து அன்றிரவு இறைவன் திருவருளேயே யெண்ணியிருந்து மறுநாள் விடியற் காலேயில் எழுந்து திருக்கழுமலத்திருக்கோயி லில் வீற்றிருந்தருளும் தாதையாராகிய இறைவரையும் ஞான வாரமுதம் அருத்திய புண்ணியத் தாயாராகிய உமை ம்மையாரையும் வனங்கிப் போற்றினர். அருகே புள்ள திருக்கோலக்காவென்னும் திருப்பதியில் எழுந்தருளிய பெருமானே வணங்கும் விருப்புடன்