பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1012

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

996

பன்னிரு திருமுறை வரலாறு


என்பதும், எலும்பைப் பெண்ணுக்கிய அற்புத நிகழ்ச்சியையே சீர்நின்ற செம்மைச் செயல் என நம்பி யாண்டார் நம்பிகள் சிறப்பித்தார் என்பதும் நன்கு புலனும்.

(3) மூர்க்க நாயனரைத் திருவேற் காட்டுச் மன்னர் என நம்பியாண்டார் நம்பி குறித்தது அவர் அரசர் குடியிற் பிறந்தவர் என்ற கருத்தினுலன்று. வேற் காட்டுர் மன்னர் என்றது அவ்வூரில் அவதரித்த தலைமைச் சிறப்புடையார் என்னும் பிறப்புரிமை பற்றியதாகும். ஞானசம்பந்தர் புகலி மன்னவன் (2-33-11 எனக் குறிக்கப் பெற்றமை கொண்டு அந்தணராகிய அவரை அரசர் மரபினர் எனக் கூறமுடியாது. அவ்வாறே வேளாண் மரபினராகிய செருத்துணை நாயனர் தஞ்சையில் தோன்றிய தலைவர் என்னுங் கருத்தில் தஞ்சை மன்னவளுஞ் செருத்துணை எனத் திருத்தொண்டத் தொகையிற் போற்றப் பெற் றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணர்தற்குரியதாகும்.

(4) சங்கப் புலவர் 49 ப்ேரே பொய்யடிமையில்லாத புலவர் என்பது நம்பி கூற்று. சங்கப்புலவர் என்ற தொடரே சேக்கிழார் காட்டவில்லை. அவர் கூற்றை உற்று நோக்கின் பொய்யடிமையில்லாத புலவர் ஒருவரோ என்று ஐயுற வேண்டியதாகவுள்ளது " என டாக்டர் இராச மாணிக்கனர் கருதுவர். திருத்தொண்டர் திருவந் தாதியையும் பெரிய புராணத்தையும் இணைத்து நோக்கும் வழி நம்பியின் கருத்தும் சேக்கிழார் கருத்தும் ஒன்றே யென்பது நன்கு விளங்கும்.

தரணியிற் பொய்மையிலாத் தமிழ்ச் சங்க மதிற் கபிலர்

பரணர் நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல் புலவோர்" (49) எனவரும் திருவந்தாதியில் நாற்பத்தொன்பது புலவோர் எனச் சங்கப்புலவரை மட்டும் குறிப்பிடாமல், சங்கப் புலவரல்லாத எண்ணிறந்த ஏனைய புலவர்களையும் உளப் படுத்திப் பல்புலவோர் எனக் குறித்தா நம்பியாண்டார் நம்பிகள். கபிலர் பரணர் முதலிய சங்கப்புலவர் என்பவர்கள் கடைச்சங்க காலத்தில் இருந்தவர்கள். அவர் களோடு தம்காலத்தில் உள்ளவர்கலையும் தமக்கும் பிற் காலத்தில் இனித் தோன்றுபவர்களையும் இணைத்துப் போற்றும் முறையில் சுந்தரராற் குறிக்கப்பட்டதொகையடி யார்களே பொய்யடிமையில்லாத புலவர் என்னும் உண்மை