பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1013

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராண்ம் gg?

வினை நம்பியாண்டாரும் சேக்கிழாரடிகளும் ஒப்ப விளக்கி யுள்ளார்கள். கபிலர் பரணர் முதலிய கடைச்சங்கப் புலவர்களை எடுத்துரைத்து அவர்களைப் போன்றுள்ள நிகழ்காலப் புலவர்களையும் எதிர்காலப் புலவர்களையும் இயைத்துக் கூறும் முறையில் நாற்பத் தொன்பது பல் புலவோர் ' எனக் குறித்தார் நம்பியாண்டார் நம்பிகள். நம்பிகள் வெளிபடக் கூறிய சங்கப் புலவர்களை மட்டும் தனித் தெடுத்துக்கூருது முக்காலப் புலவர்களையும் ஒப்பக் கூறும் முறையில் பொய்யடிமையில்லாத புலவராவார்

இத்தன்மையர் எனச் சேக்கிழாரடிகள் விளக்கம் தந்துள்ளார்.

தரணியிற் பொய்ம்மையில்லாத் தமிழ்ச்சங்க மதிற் கபிலர் பரணர் நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல் புலவோர் எனப் புலவர் பெயர்களை எண்ணிய நம்பி பாண்டார் நம்பிகள், முதலிற் குறித்த சங்கப்புலவர்கள் இன்ப வொழுக்கமாகிய அகத்திணை பற்றிப் பாடிய பாடல்கள் மேற்போக்காக நோக்கும்வழி உலகியல் பற்றிய அகத்தினை யொழுகலாற்றை உணர்த்துவன வாகவும், அன்புநெறிப் பாடல்களாகிய அவற்றைக் கூர்ந்து நோக்கும்வழி எவ்வுயிர்க்கும் இன்பம் நல்கும் அன்புருவாகிய இறைவனையே ஆன்மநாயகனுகக்கொண்டு அன்புசெய்து அவன் திருவடிகளை படைதற்குரிய அருள் நெறிக்குத் துணைசெய்வனவாகவும் அமைந்த நுட்பத்தினை,

அருள் நமக்கீயும் திருவாலவாயசன் சேவடிக்கே பொருளமைத்தின்பக் கவிபல பாடும் புலவர்களே " எனவரும் தொ. ரிற் குறித்து அப்புலவர் பெருமக்களது சிறப்பியல்பினை இனிது விளக்கியுள்ளார். சங்கப்புலவர் களுக்குரியனவாக நம்பிகள் குறித்த இச்சிறப்பியல்புகளை, நாதமறைதந் தளித்தாரை நடைநூற்பாவில் தவின்றேத்தும் பேரதமருவிப் பொய்யடிமையில்லாப் புலவர் " எனவும்,

  • செய்யுள் நிகழ் சொற்றெளிவும் திருந்தியநூல் பல நோக்கும்

மெய்யுணர்வின் பயனிதுவே எனத் துணிந்து விளங்கி யொளிர் மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே யான ரஞர் பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்க '

என வும் சேக்கிழாரடிகள் அவ்வாறே எடுத்தாண்டுள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத்தகுவதாகும்.