பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1043

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 1927

கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனுந் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பல வின் பழங்களும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்

(சிலப் - காட்சி - 37 - 53) முதலியவற்றைக் கையுறைப் பொருள்களாகக் கொண்டு சென்றதனை இளங்கோவடிகள் குறித்துள்ளமையும், திண் ண னுரது வில் விழாக்கான விரும்பிய வேடர்கள் பொருள் பலகொண்டு வந்த செய்தியை,

மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின்தோலும் கொலைபுரிகளிற்றுக்கோடும் பீலியின் குவையும் தேனும் தொலைவில்பல் நறவும் ஊனும் பலங்களுங் கிழங்குந்துன்றச் சிலேடியில் வேடர்கொண்டு திசைதொறும் நெருங்கவந்தார் . (பெரிய - கண்ணப்பர் - 30) எனவரும் பாடலிற் சேக்கிழா டிகள் குறித்துள்ளமையும் ஒப்பு நோக்கத் தக்கனவாம்.

செங்குட்டுவன் வடநாட்டின் மேற் படையொடு செல்லுங்கால், அவனுடைய பெருஞ்சேனைகள் மலையும் நிலமும் ஒன்ருகும்படி சென்ற தன்மையினை,

தண்டலைத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத மலைமுதுகு நெளிய நிலை நா ட தர்பட உலக மன்னவன் ஒருங்குடன் சென்று '

(சிலப் - கால்கோள் - 80, 83} என இளங்கோவடிகள் குறிப்பிடுவர். இவ்வாறே சேர மான் பெருமாளாகிய வேந்தர் பெருமான் தில்லையம்பலத் தினைப் போற்ற விரும்பி வஞ்சியினின்றும் புறப்பட்டுச் செல்லுங்கால் அவரது பெருஞ்சேனை சென்ற தன்மையினை

மிசையும் அவலும் ஒன்ருக நிரவிப் பரந்த பெருஞ்சேனை நேமிநெளியச் சென்ற னவால் ’ (பெரிய கழறிற் - கி.9)

எனச் சேக்கிழாரடிகள் குறித்துள்ளமையும் காண்க.

செங்குட்டுவன் கண்ணகியார் படிமம் அமைத்தற்குக் கற்கொணர வேண்டி வடநாட்டின்மேற் படையொடு சென்று பகைவரை வென்று பத்தினிக் கல்லொடு மீளா நின்ருளுக, அவனைப் பிரிந்த கோப்பெருந்தேவி குறிஞ்சி முதலாக நாலு நிலத்துப் பாணியும் ஒர்த்து உறங்காதே