பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1046

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1030

பன்னிரு திருமுறை வரலாறு

என இவ்வுவமையை எடுத்தாண்டுள்ளார். வேடுவன் உவமை கூறுங்கால் வாழ்க்கையில் தனக்கு நன்ருகத் தெரிந்த பொருளை உவமை கூறியதாகவுரைத்த ஆசிரியரது புலமைத் திறம் பாராட்டத் தகுவதாகும்.

சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிற் பிறந் தோணுகிய முருகப்பெருமானை,

பூவுனுட் பிறந்த தோன்றற் புண்ணியன் (சீவக - 316)

எனத் திருத்தக்கதேவர் குறிப்பிடுவர்.

" தாமரை மிசைத் தனிமுதற்குழவி (பெரிய சம்பந்தர் - 41)

என வரும் பெரிய புராணத்தொடர் மேற்குறித்த சீவக சிந்தாமணித் தொடரை அடியொற்றி யமைத்திருத்தல்

கான லாம்.

பருந்தும் அதன் நிழலும் போல மிடற்றுப் பாடலும் யாழிசையும் பொருந்தியிருத்தல் வேண்டும் என்பதனை,

பகுந்தும் நிழலும்போற் பாட்டும் எழாலும்

திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தன . சீவக - :30, எனவரும் தொடரில் திருத்தக்கதேவர் குறித்துள்ளார்.

  • பருந்து பறக்குமிடத்து முறையே உயர்ந்து அந்நிலத்தின் கண் நின்று ஆய்ந்து பின்னும் அம்முறையே உயர்கின்ருற்போலப் பாடவேண்டுதலின் பாட்டிசைக்குப் பருந்தும், அதனுடன் பிரிவின் றி பிசைந்த யாழிசைக்குப் பருத்தின் நிழலும் உவமையாயின திருநீலகண்ட்ப் பாணர் மதங்க சூளாமணி யாருடன்பாடி யாழ் வாசித்த பொழுது அவ்விருவரது மிடற்று பாடலும் யாழிசையும் ஒன்றியிசைந்த மாட்சியின,

"யாழிலெழும் ஓசையுடன் இருவர் மிடற்றிசை யொன்றி வாழி திருத்தோணியுளார் மருங்கனையும் மாட்சியினைத் தாழுமிருசிதைப் பறவை படிந்த தனி விசும்பிடை கின் றேழிசைநூற் கந்தருவர் விஞ்சையரும் எடுத்திசைத்தார்

பெரிய - சம்பந்தர் - 136) எனவரும் பாடலிற் சேக்கிழாரடிகள் விளக்கியுள்ளமை ஒப்புநோக்குதற் குரியதாகும்.

சச்சந்தன் மனைவியாகிய விசயை என்பாள் த ன் கண்ட தீக்களுவினைத் தன் கணவனுக்கு எடுத்துரைப்பவள்,