பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1045

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் {{???

தலைச்சங்கப் புலவராகக் குறிக்கப்பெற்றிருத்தலை யுளங்

கொண்ட சேக்கிழார் நாயனுர், ஆலவாயிறைவரைத்,

'தலைச் சங்கப் புலவளுர் ' (பெரிய - சம்பந்தர் - 667)

எனக் குறித்துப் போற்றியுள்ளார்.

கூடலம்பதியில் நிலைபெற்ற கடைச் சங்கத்தில் திருவால வாயுடையார் ஆகிய இறையனரும் சங்கப் புலவருள் ஒருவராக எழுந்தருளித் தமிழாராய்ந்தார் என்பது,

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்துமென்

சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்

தீந்தமிழின்துறை ’ (திருக்கோவை) எனவரும் மணிவாசகர் வாய்மொழியால் அறியப்படும். இச்செய்தியின,

சென்றனைத்து மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழாராய்ந்தருளிய அங்கனர்

(பெரிய - திருநாவுக் - 408)

எனச் சேக்கிழாசடிகள் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும்.

உடும்பு உடல் சிதையப் பறித்து இழுத்த நிலையிலும் தான் வாழும் இடத்தைவிட்டுப் பெயராது உறுதியாகப் பற்றிக்கொள்ளும் தன்மையதாகும். குடும்ப வாழ்க்கை யினையே விடாது பற்றிக் கிடக்கும் மக்களுக்கு அளையை விட்டுப்போகாத உடும்பினை உவமையாக எடுத்துரைப்பர் திருத்தக்கதேவர்.

தனக்கிறப் பறித்தபோதும் தானளை விடுத்தல் செல்லா நினப்புடை யுடும்பளுரை யாதினு னிக்கலாகும் "

(சீவக - மூத்தி - 289) என்பது திருத்தக்கதேவர் வாக்காகும். திண்ணணுர் திருக் காளத்தி மலையில் குடுமித்தேவரைக் கண்டு அவரை விட்டுப் பிரியாது நின்ற நிலையினை நாணன் காடனுக்கு எடுத்துரைக்குமிடத்து,

அங்கிவன் மலையில்தேவர் தம்மைக் கண்டனைத்துக்கொண்டு வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்பென்ன நீங்கான்

(பெரிய - கண்ணப்பர் - 318)