பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1049

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் #033

கங்கை நீர் நிறைந்த சடையுடன் பொருந்திய திரு மேனியையுடையவனும், அளவில்லாத பேரொளிப் பிழம் பாகத் திகழ்பவனும், ஞானமயமான தில்லைச் சிற்றம் பலத்திலே ஆடல் புரிந்தருள்பவனும் ஆகிய இறை வனுடைய செந்தாமரை மலர்போலும் சிலம் பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணங்குவோம்’ என்பது இத்திருப் பாடலின் பொருளாகும். இச்செய்யுள், தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைக்கும் தற்சிறப்புப் பாயிர மாய் இந்நூலின் மங்கல வாழ்த்தாக அமைந்துளது. இதன்கண் உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன், நிலவு உலாவிய நீர்மலி வேனியன், அலகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் எனப் பொருளியல்பு உரைத்தலும், மலர் சிலம்படி :ோழ்த்தி வணங்குவனம் என வாழ்த்தும் வணக்கமும் அமைத்திருத்தல் காணலாம். இங்கு உலகு என்றது உயிர்களை, உணர்தல் - மனத்தின் தொழில்; அஃது உயிரறிவாகிய பசு ஞானத்தைக் குறித்தது. ஒதுதல் - வாக்கின் தொழில் அது நூலறிவாகிய பாச ஞானத்தைக் குறித்தது. பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் பார்த்தற்கரியவன் பரம்பரளுகிய இறைவன் என்பார் உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் ’ என்ருர். இதல்ை இறைவனது உண்மையியல்பு (சொரூப இலக்கணம்) உணர்த்தப்பட்டது.

  • அரியானை ... யார்க்கும் தெரியாத தத்துவனே (8-4-1) எனவும்,

காண் டற்கரிய கடவுள் கண்டாய் எனவும்,

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணுதே

எனவும்,

அரியகாட்சிய ராய்த்தம தங்கை சேர்

எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமும்

கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்

பெரியர் ஆசறிவாரவர் பெற்றியே (3–54–2) எனவும் வரும் திருப்பதிகப் பொருளை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் ' என்ற தொ.ராகும். இங்ங்னம் மனத்தால் உணர்தற்கும் வாக்கால் ஒதுதற்கும் அரியகுய் மாற்ற