பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1053

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் i{}37

நம்பியாரூரர் அடியார் கூட்டத்துடன் குருகாவூர்ப் பெரு மானை வழிபடச் செல்பவர், வழியிடையில் பசியால் இளைப் புற்றபொழுது, குருகாவூர்க் குழகராகிய இறைவர் மறை வேதியராய்த் தோன்றித் தண்ணிக் ப்பந்தர் அமைத்துப் பொதி சோறுடன் நம்பியாரூரரை எதிர்பார்த்திருந்தாாாக, அங்கு அடியார்களுடன் வந்த நம்பியாரூரர் அத்தண்ணிர்ப் பந்தரில் அமரும்போது திருவைந்தெழுத்தினை ஒதிக் கொண்டு அமர்ந்தார் என்பதனை,

" குருகாவூர் அமர்ந்தருளுங் குழகர்வழி பார்த்திருப்பத்

திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன்

வருவார் அப்பந்தரிடைப் புகுந்து திருமறையவர் பால்

பெருகர்வஞ் செலவிருந்தார் சிவாயநம எனப்பேசி"

(ஏயர்கோன் - 15க்}

எனவரும் பாடலில் ஆசிரியர் கூறியுள்ளார். இத்திருப் பாடலில்,

'திருவாய்ப்பொலியச் சிவாயநமவென்று நீறணிந்தேன் "

(4 – 94 – 6)

எனவும்

“ வல்லவாறு சிவாயநம எளு

நல்ல மேவிய நாதனடி தொழ ” {5 – 43 - 6)

எனவும்,

" தானேயோ தவஞ்செய்தேன் சிவாயநமவெனப் பெற்றேன்" (திருவாசகம் - 532) எனவும் சைவ சமய குரவர்களால் ஒதுமுறையிதுவென அறிவுறுத்தப் பெற்ற சிறப்புடைய மந்திரமாகிய திருவைந் தெழுத்தின் அமைப்பு இனிது விளக்கப்பெற்றுள்ளமை உணர்ந்து போற்றத்தகுவதாகும்.

திருவாளன் திருநீறு எனவும், உறுவது நீற்றின் செல்வம் எனக்கொளும் உள்ளம் மிக்கார் (பெரிய - தில்லை வாழ் - 6) எனவும், ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அக்காப்பின், ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார்’ (திருநீலநக்கர் - 3) எனவும்,

" தொன் மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின்

நன் மைக்கண் நின்ற நலமென்றுங் குன்ருதாச் (ஏனுதி-3)

எனவும்,