பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1056

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1040

பன்னிரு திருமுறை வரலாறு


சித்தாந்த தத்துவ உண்மைகள் பல இக்காப்பியத்தில் இலக்கியச் சுவையமைய நன்கு விளக்கப்பெற்றுள்ளன.

சன்னி வேட்டைக்குச் சென்ற திண்ணணுர் காளத்தி மலையினைக் கண்டு அம்மலைமேல் எழுந்தருளிய குடுமித் தேவரை வழிபடுதல் வேண்டும் என்னும் பெருவேட்கை யுடன் நாணனைத் துணையாகக் கொண்டு காளத்தி மலையின் மேல் ஏறிச்சென்ற அன்பின் திறத்தினை,

"நானனும் அன்பும் முன்பு தளிர்வரை ஏறத்தாமும்

பேணுதத்துவங்கள் என்னும் பெருகுசோபானம் ஏறி ஆணையாம் சிவத்தைச்சார அணை பவர்போல ஐயர் நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும்போதில் "

(பெரிய - கண் ணப்பர் - 103)

எனவரும் பாடலில் ஆசிரியர் விளக்கியுள்ளார். தம் தோழனுகிய நாணன் என்பவனும் தா. குடுமித்தேவர்.பால் வைத்த அன்பும் தமக்கு முன்னே குளிர்ந்த மலையின்மேல் ஏறிச்செல்ல, உயிர்களைப் பேணி வர்ைக்கும் தத்துவங்கள் என்கின்ற பெருகும் படிகளை ஏறி, அருளே வடிவமாகிய சிவபரம்பொருளைச்சார அணை பவர்களாகிய சிவயோகிகளே ப் போல, திண்ணனாகிய தலைவர் நீண்ட நிலைமையினை யுடைய திருக்காளத்தி மலையின்மேல் ஏறிக் குடுமித் தேவரை நேர்படச் சென்ருர் என்பது இச்செய்யுளிற் குறிக்கப்பெற்ற செய்தியாகும். சுத்தம் அசுத்தம் என்ற இருவகை மாயையினின்றும் தோன்றிய நிலம் முதல் சிவம் ஈருக உள்ள தத்துவங்கள் முப்பத்தாறும் சகல நிக்லயில் உயிர்களின் அறிவு இச்சை செயல்களின் வளர்ச்சிக்குக் கருவியாய் அவ்வுயிர்களை வளர்த்தலின் பேணுதத்து வங்கள் எனப்பட்டன. இவை எல்லாவுயிர்களுக்கும் போகத்தைக் கொடுப்பன வாய்ப் பிரளய காலம் வரை நிலைத் திருக்கும் உண்மைப் பொருள்களாதலின் தத்துவம் எனப் பெயர் பெற்றன. நிலம் முதலாகவுள்ள இத் தத்துவங்கள் அனைத்தையுங் கடந்து மேற்சென்று தத்துவங்கடந்த செம் பொருளாகிய இறைவனை அணைதற்கு இத் தத்துவங்கள் படிபோன்று மேன்மேல் விரிவுடையனவாக அமைதலின் தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம்’ என்ருர், சோபானம் - படி. சிவபரம்பொருளாகிய இறைவன் தனது அருளாகிய சத்தியுடன் நீக்கமின்றி திற்றலால் சிவமும் சத்தியும் ஒன்றே என்பார் ஆணையம் சிவம்’