பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1067

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் is of

வந்திழிகண்ணிர் மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத்தரசும் எதிர் வந்தனைய ' கண்டகவுணியக் கன்றும் கருத்திற்பரவு மெய்க்காதல் தொண்டர்திருவேடம் நேரே தோன்றிய தென்னத்

தொழுதே (பெரிய - சம்பந்தர் - 270, 271) எனவரும் பாடல்களில் விரித்துக் கூறியுள்ளார். இங்ங் னம் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்ற ஞானசம்பந்தர் அடி யார் திருவேடத்தினையும் திருக்கோயிலையும் அரனெனவே கண்டு தொழுத இவ்வரலாற்றுச் செய்தியை அடிப்படை யாகக் கொண்டதே சிவஞானபோதத்தில்,

செம்மலர் நோன்ருள் சேரலொட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே எனவரும் பன்னிரண்டாஞ் சூத்திரமாகும். பன்னிரண்ட ந் திருமுறையாகிய பெரிய புராணத்தில் அமைந்த அடியார் செய்திகள் சிவஞான போதம் பன்னிரண்டாஞ் சூத்திரப் பொருளுக்குரிய இலக்கியங்களாக அமைந்திருத்தலையுணர் வோர் பன்னிரு திருமுறைகளின் பயனுக அமைந்ததே சிவஞான போதம் என்னும் மெய்ம்மையினைத் தெளிவாக உணர்வார்கள் .

மக்களது ஆக்கப் பொருளாய் வழங்கும் மொழி, அதனைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களது மன வளர்ச்சிக்கு ஏற்ப வளம் பெற்றுயர்வதாகும். என்று முள தென்தமிழாகிய நம் தமிழ் மொழியும் செயற்கரிய செய்வாராகிய திருத்தொண்டர்களின் அருள் வாழ்க்கை யின் பயணுக அன்பு முதலிய நற்பண்புகளை நிரம்பப் பெற்றதாய், ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் எனப் பாராட்டிப் போற்றும் பெருஞ்சிறப்பினைப் பெற்ற திறத்தினையும், அக்காலத்தில் ஆட்சி மொழியாய் தமிழ் விளங்கிய முறையினையும் அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத் தில் இனிது விளக்கியுல வார். ஆசிரியர் திருத்தொண்டர் களின் வரலாற்றினை விரிக்குமிடங்களில் எல்லாம் தமிழில் உயர்த்தற்கண் விகுதியாகிய ஆர் விகுதியினைப் பெய்து இக்காப்பியத்தினை வேத்தியல் தமிழ் நடையில் அமைத்