பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1070

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1054

பன்னிரு திருமுறை வரலாறு


என்று உறுதி பூண்ட திருநீலகண்டக் குயவருைம் அவர் தம் அன்புடைய மனைவியாரும் மெய்யுறு புணர்ச்சியின்றி வளமலி இளமை நீங்கி வடிவுறு மூப்புவந்து தளர்வொடு சாய்ந்தும் தம்பிரான் திறத்து அன்பு நீங்காமல் இல் வாழ்க்கை நெறியினை இனிது நிகழ்த்திய முறையினையும், அவ்விருவரது துரிய அன்பின் திறத்தினைச் சிவபெருமான் சிவயோகியாராக எழுந்தருளி ஞாலத்தார் விரும்பியுய்யும் நன்னெறி இதுவாம் எனக்காட்டிய திறத்தினையும் சேக் கிழார் விரித்துக் கூறும் பகுதி,

  • அறனெனப்பட்டதே இல் வாழ்க்கை அஃதும்

பிறன் பழிப்ப தில்லாயின் நன்று '

என வரும் திருக்குறளுக்குரிய சிறந்த விளக்கவுரை போன்றமைந்திருத்தல் அறிந்து மகிழத் தகுவதாகும்.

முற்காலத் தமிழ் மக்கள் வாழ்க்கையில் அன்பினுல் ஒருவனும் ஒருத்தியும் கலந்து வாழும் காதல் வாழ்விலும் கூட உயிர்க்குயிராகிய கடவுட்பற்றே மேம்பட்டு விளங்கிய தென்பதனை,

அண்ன லவன் தன்மருங்கே அளவிறந்த காதலிளுல் உண்ணிறையும் குனம் நான்கும் ஒருபுடைச ய்ந்தன

எனினும் வண்ண மலர்க் கருங்கூந்தல் மடிக்கொடியை வலிதாக்கிக் கண்ணுதலைத்தொழும் அன்பே கைக்கொண்டு செலவுய்ப்ப '

பெரிய தடுத்தாட் - A,

எனவரும் பாடலில் ஆசிரியர் நன்கு விளக்குகின் ருர்,

அன்புடையாரிருவர் ஒருவரையொருவர் இன்றியமை யாதாராய்க் கலந்து வாழ்தற்கு ஏக்கற்று வருத்து: துயர் நிலையிலும், தாம் வாழும் தமிழ்நாட்டையும் தம் தாய்மொழி யாகிய தமிழையும் மறவாது போற்றும் பண்பினராக வாழ்ந்த அக்காலத் தமிழ் மக்களது இயல்பினே,

  • பிறந்ததெங்கள் பிரான்மலயத் திடைச்

சிறந்தணைந்தது தெய்வ நீர் நாட்டினில் புறம்பனைத்தடம் பொங்கழல் வீசிட மறம் பயின்ற தெங்கே தமிழ் மருதம்

1பெரிய தடுத்தாட் - 187) என நாவலூர் நம்பியைக் காதலித்த நங்கை பரவையார் தமிழ்த் தென்றலை நோக்கி இரங்கிக் கூறுவதாக அமைந்த