பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1075

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莹

அமைப்புக்களைக் கூர்ந்து நோக்கித் திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம் ஆகிய திருமுறைகளுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்த போது இதுவரை விளக்கம் பெருத செய்திகள் சில நன்கு புலஞயின. இச் சிற்பங்களில் சேரமான் பெருமாள் கதை பற்றிய சிற்பத்தினைக் குறித்தும் உடைய நம்பிகளுக்குரிய சிற்பங்களுள் ஒன்றைக் குறித்தும் கல்வெட்டுத் துறை யினரும் இக்கால வரலாற்ருராய்ச்சியாளர் சிலரும் எழுதிய குறிப்புக்கள் சில பொருத்தமற்றன என்பது புலனுயிற்று. ' திருத்தொண்டத் தொகையடியார்களின் வரலாற்று நிகழ்ச் சியைக் குறித்தமைந்த இச் சிற்பங்களைக் கூர்ந்து நோக் கியபொழுது இவை தொண்டர்சீர் பரவுவாராகிய சேக் கிழார் நாயனர் காலத்திலேயே வரலாற்று முறையினை ஆராய்ந்து அமைக்கப்பெற்ற தொன்மை வாய்ந்தன என்னும் உண்மை இனிது புலனுயிற்று.

இச் சிற்பங்கள் யாவும், குறித்த அடியாரை மட்டும் குறிப்பிடும் முறையில் தனித் திருவுருவமாக அமைக்கப் படாமல், அத்திருத் தொண்டரது சிறப்புக்குரிய வாழ்க்கை நிகழ்ச்சியினிடையே அவ்வடியவரைக் குறித்துக்காட்டும் முறையில் வரலாற்றுச் சிற்பங்களாக அமைக்கப்பெற்றுள் ளன. இச் சிற்பங்களிற் குறிப்பிடுதற்குரிய நாயனசது திருவுருவத்துடன் அவரது வாழ்க்கை நிகழ்ச்சியிற் பிணைந் துள்ள பிறரது உருவமும் செயல்களும் செயல்களுக்குரிய சூழ்நிலைகளும் அவரவர் உள்ளக் குறிப்புக்களின் வெளிப் பாடாகிய மெய்ப்பாடுகளுடன் தெளிவாக அமைத்துக் காட்டப் பெற்றுள்ளன. அன்றியும் அவ்வச் சிற்பத்திற் சிறப்பாகக் குறிப்பிடுதற்குரிய திருத்தொண்டரது திரு வுருவம் அவருடைய வெவ்வேறு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் நிலையில் நிகழ்ச்சிகள் தோறும் தொடர்ந்து இடம் பெற்றி ருத்தலையும், அத்திருத்தொண்டர் வழிபட்ட திருக்கோயி

1. இச் சிற்பங்களைக் குறித்துத் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் திரு. K. M. வேங்கடராமையா M.A., B.C.L., அவர்கள் 1961 ஜனவரியில் வெளிவந்த திருக்கோயில் பத்திரிகை யில், தாராசுரத்து இராசராசேச்சுரம் என்ற தலைப்பில் வெளி விட்டுள்ள கட்டுரை, இச் சிற்பங்களின் வரிசை முறையினைப் பிற ழாது அறிந்து கொள்ளுதற்கு உறுதுணையாக அமைந்துள்ளமை இங்குக் குறிப்பிடத் தகுவதாகும்.