பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் §§

பதிகத்தைப் பாடியருளினரென்பது வரலாறு. நம்பியாரூர ராற் பெயர் கூறிப் போற்றப்பட்ட தனியடியார்களுள் திரு வாதவூரடிகளது பெயர் குறிக்கப்பெறவில்லை. தமக்குத் தெரிந்த சிவனடியார்க ளெல்லோரையும் போற்றிப் பரவு தலையே நோக்கமாகக்கொண்டு திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை அருளிச் செய்தவர் நம்பியாரூரராவர். அறிவினுற் சிவனே யெனப் போற்றப்பெறுஞ் சிறப்பமைந்த மாணிக்கவாசக சுவாமிகள் ஆரூரர்க்குக் காலத்தால் முற்பட் டிருந்திருப்பின் அப்பெருந்தகையாரையும் அவர் தமது திருத் தொண்டத் தொகையில் பெயர் கூறிப் பாராட்டிப் போற்றி யிருப்பார். அடியார்க்குத் தொண்டுபட்டு அவர்களது பெரும் புகழையே பேசும் விருப்புடைய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருத்தொண்டத் தொகையில் திருவாத வூரடிகளைக் குறிப்பிடாமையால் அவ்வடிகள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்திலோ அன்றி அவர் காலத்திற்கு முன்குே வாழ்ந்தவரல்லரென்பதும் சுந்தார்க்குக் காலத்தாற் பிற் பட்டவரென்பதும் நன்கு துணியப்படும்.

(3) தேவார ஆசிரியர் மூவர் காலம் வரையிலும் தில்லை நடராசப் பெருமான் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெரு மாள் சந்திதி இருந்ததில்லை இயன்பதும், இதனை முதன் முதல் அமைத்தன் கி. பி. 710 முதல் 775 வரை ஆட்சி புரிந்த பல்லவ வேந்தளுகிய நந்திவர்ம பல்லவமல்லனே யென்பதும் ஆராய்ச்சியாளர் துணிபாகும்.*

' பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்த்து

படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணிமா டங்கள் சூழ்ந்த தில்லைத்

திருச்சித்திர கூடம் சென்று சேர்மின்களே "

(பெரிய திருமொழி 3-2-3) எனத் தில்லைத் திருச்சித்திர கூடத்தைப்பற்றி நந்திவர்ம பல்லவமல்லன் காலத்தவராகிய திருமங்கை யாழ்வார் பாடிப் போற்றியுள்ளார். இங்கு ஆழ்வாராற் பாராட்டப்பட்ட பல் லவ வேந்தனுகிய நந்திவர்ம பல்லவன் முதலில் சைவ வைணவ சமயங்களிற் பொது நோக்குடையவனுக இருந்து பின் பரம வைஷ்ணவனுக மாறியவனென்பது, இவனளித்த

  • திருவாளர் மு. இராகவையங்காரவர்களால் எழுதப்பட்ட * திருச்சித்திர கூடம் என்ற கட்டுரை பார்க்க. (The Annais Oriental Research of the Madras University Vol. III (1938 Part I.