பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ண்டேசர் வழிபாடு செய்த சிவலிங்கத் திருவுருவம் மலே யுள்ளமையும், சிவபூசைப் பொருளைக் காலாற் 1தைத்த தந்தை எச்சதத்தன் கால்களைச் சண்டீசர் கழுவால் வெட்டுதலும், கால்கள் துணிக்கப்பட்ட எச்ச தத்தன் கீழே வீழ்ந்து கிடத்தலும் காணலாம். அடுத் துள்ள சிற்பத்தில் திருநாவுக்கரசர் உழவாரப் படையுடன் அமர்ந்துள்ளார். அவரருகே மார்பிற் குவித்தகையினராய் அமர்ந்திருப்பவர் குலச்சிறை நாயனர். அடுத்துள்ளது பெருமிழிலைக் குறும்ப நாயனுர், நம்பியாரூரரை ஆசனத் தமர்த்தி அவருடைய திருவடிகளை வழிபடும் முறையில் அமைந்த சிற்பமாகும். இதன்கண் நிலமிசை இருந்து திருவடியைத் தொட்டு வழிபடுபவர் பெருமிழலைக் குறும்ப நாயனர். அவர் விரும்பி வேண்டிய வண்ணம் தவிசின் மேல் அமர்ந்து அவரது வழிபாட்டினை ஏற்றுக்கொள்பவர் நம்பியாரூரர். இச் சிற்பம்,

  • சித்தம் நிலவும் திருத்தொண்டத் தொகை பாடிய

நம்பியைப் பணிந்து நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத்தல்

நின்ருர் ' எனவும்,

  • மையார் தடங்கட் பரவையார் மணவாளன் தன் மலர்க்கழல்கள்

கையால் தொழுது வாய்வாழ்த்தி மனத்தால் நினைக்குங்

கடப்பாட்டில்

செய்யான் கோனும் தான்முகனும் அறியாச் செம்பொற்

ருளிணைக்கீழ்

உய்வான் சேர உற்றநெறி இதுவே என்றன் பினிலுள்த்தார்' (பெரிய-பெருமிழலை, A: )

எனவும் வரும் சேக்கிழாசடிகள் வாய்மொழிகளை யுளத்துட் கொண்டு அமைக்கப் பெற்றிருத்தல் அறியத் தகுவதாகும். இதனையடுத்து இரு கைகளிலும் தாளமிட்டுப் பாடிக் கொண்டு அமர்ந்திருக்கும் நிலையில் அமைந்தது பேயா ராகிய காரைக்காலம்மையார் திருவுருவமாகும். இதனை யடுத்து அப்பூதியடிகளது வரலாற்றுச் சிற்பம் அமைக்கப் பெற்றுளது. தாண்டவம் புரிய வல்ல தம்பிரானுக்கு அன்ப ராய்ச் சிந்தையிற் சிவனை நினைந்து வழிபாடு செய்து அமர்ந்திருக்கும் அப்பூதியடிகளும், விடந்தீண்டியிறந்த மைந்தனைப் பாயில்வைத்து மறைக்கும் நிலையில் அப்பூதியார் ம2ன்வியாரும், மைந்தனைத்தீண்டிய பாம்பு படம்விரித்த நிலை யில் வாழையிற் சுற்றிக்கொண்டுள்ளமையும் காணலாம்.