பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 芷蕙

க, சிவபுராணம்

திருவாசகத்தின் முதற்கண் உள்ள சிவபுராணம், கீர்த்தித்திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித்திருவக வல் என்ற நான்கும், திருக்குறளின் முதற்கண்ணவாகிய கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களையும் போன்று தெய்வத் தமிழ்மறைக்குரிய பாயிரமாக அமைந்தன எனக் கொள்ளுதல் பொருந்தும். திருக்குறளில் முதற்கண் உள்ள கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தைப் போன்று திருவாச

- ఇవీ $$ 4. - - . . கத்தின் முதலில் அமைந்தது சிவபுராணமாகும். இஃது, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது அநாதி முறைமையான பழமையினே விரித்துரைப்பதாகலின், சிவபுராணம் என்னும் பெயர்த்தாயிற்று. சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை, முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பன் யான் ' என இதன் கண் அடிகள் குறிப்பிடுதலால், சிவனது அநாதி முறைமையான பழமை யென்னும் ஒகு பொருளே

؟ - س - - گاہ سیعہ ؟ - : . . “ ، یہ ی م ۰“ ج: ہم جی. நுதலியது இத்திருப்பாட்டு என்பது இனிது விளங்கும். தொண்ணுற்றைந்தடிகளை யுடைய இப்பாடல்,

ஒருபொருள் நுதலிய வெள்ளடி யியலால்

திரியின்றி வருவது கலிவெண் பாட்டே (செய்யுள்-153)

என்ற தொல்காப்பிய இலக்கணத்தின்படி அமைந்த கலி வெண் பாட்டாகும். இது கடவுட்பராய முன்னிலைக்கண் வந்த பாடாண் பாட்டு என்பர் ஆசிரியர் மறைமலையடிகள்.

  • x

உலகிறகு நிமித்த காரணளுகிய சிவபெருமான், திருவைந்தெழுத்தாகிய மந்திரப்பொருளாய் விளங்கி உயிர் களின் நெஞ்சத்தாமரையிலே நீங்காதெழுந்தருளியிருந்து உள் நின்று உபகரித்தருள்வதோடு புறத்தேயும் ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளி வந்து திருப்பெருந்துறை யில் தமக்கு மெய்ப்பொருளே உபதேசித்தருளிய அருட் செய்தியும், அப்பெரியோன் அறிவுறுத்தருளிய மெய்ந்நூற் பொருளைச் சிந்தித்துனரும் நிலையில் அம் முதல்வன் ஆகம நூற் பொருளாகித் தம் நெஞ்சத்தே அண்ணித்திட்டு அமு தூறும் இனிமைத்திறமும், தனிமுதற் பொருளாகிய இறை வன் தன்னை அன்பினுல் நினைந்துருகும் மெய்யடியார்கள் உள்ளத்தே அவரவர் நினைந்த திருமேனிகொண்டு விரை அருள்புரிதல் வேண்டிப் பலவேறு திருக்கோலங்களைத்