பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

பன்னிரு திருமுறை வரலாறு


வண்ணம் இறைவன் குருமூர்த்தியாக எளிவந்து தம்மை ஆட்கொண்டு பாதுகாத்தருளிய அருட்செயலை எடுத்துரைத் துப் போற்றும் முறையில் திருவாதவூரடிகள் இத் திருச்சத கத்தை அருளிச் செய்துள்ளார். எனவே இச் சதகத்திற்குப் பத்து வகையாக இரட்சித்த முறைமை எனக் கருத்துரைத் தல் பொருத்தமுடையதாகவே தோன்றுகின்றது.

பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு பதிகம் என்ற முறை யில் இத் திருச்சதகத்தில் பத்துப் பதிகங்கள் அமைந்து உள்ளன. ஒவ்வொரு பதிகமும் தனித்தனி யாப்பமைதி பெற்றுத் தனித்தனித் தலைப்புடன் விளங்குதல் காணலாம். ജിച്. ദ് ഹാ : ) . പ് * , to # เคร* frr; i 1ะ#if:#ff; : ; இவற்றுள் மெய்தானரும்பி எனத கதாடங்கு முதற பதிகம் ' மெய்யனர்தல் என்ற தலைப்பில் அமைந்துளது. மெய்யுணர்வாவது, தோற்றக் கேடுகளின்றித் துய்தாய் என்றும் உள்ள மெய்ப்பொருளாகிய இறைவனை இடை விடாது நினைந்து போற்றுதல். உடல், கருவி, நுகர்ச்சி யாகிய உலகப்பொருள்களின் நிலையாமைகண்டு அவற்றின் பிணிப்பிலிருந்து விலகி, மெய்ப்பொருளாகிய கடவுளே அநுபவ வாயிலாக உணர்ந்து போற்றும் நிலையில் திருச்சத கத்தின் முதற்பதிகம் அமைந்துளது. மெய்யுணர்தல் என்னும் இப்பதிகத் தலைப்புக்குத் தேகாதி பிரபஞ்சங்களைக்

- ش. حسام ، "گ -- ؟ ۹ سر می سیاسی ای - ఫి గా , ఫి గ:1 : கண்டு நீங்குதல் என முன்னுேர் கூறிய விளக்கம் இத் திருப்பதிகக் கருத்தினை நன்கு புலப்படுத்துவதாகும்.

ஆருயிர்த் தலைவனை நினைந்த அளவில் உண்டாம் அன்புமேலிட்டால் உள்ளத்தே இன்பவுணர்வு தோன்றுத லும், அவ்வுணர்வின் வழிப்பட்ட மெய்ப்பாடாக உடம்பில் மயிர் சிலிர்த்தலும் நடுக்கம் உண்டாதலும், முன் தலைவன் செய்த தலையளியை எண்ணுந்தோறும் நெஞ்சம் நெகிழ்ந்து உருகப் பெறுதலும், அதன் பயணுகக் கண்ணிரரும்புதலும், தலைவனுடைய இனிய பண்புகளையுணர்ந்து இன்புறுதற்குத் தடையாயிருந்த இடையூறுகளெல்லாம் அறவே அகன் ருெழிய அப்பெருமானது கருணைத் திறத்தினை யெண்ணி அகங்குழைந்து பாராட்டிப் போற்றுதலும் ஆகிய இச் செயல்கள் தலையாய அன்புடையார்பால் நிகழ்வனவாகும்.

வேர்க்குங்கண் ணிர்ததும்புங் கம்பித்து மெய்நடுங்கும் வார்த்தை நழுவும் மனம்பதறும் - கார்க்கதமாய்க் காந்தும் உரோமாஞ் சலியாகுங் காதலித்தார்க் கேய்ந்தகுண மாமிவையெட் டும்.