பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் திருப்பாட்டாகும். இதன்கண் அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் நான் என்செய்கேன்' எனவரும் தொடர் அடிகளது பரவச நிலையைப் புலப்படுத்துவதாகும். இறை வனது பேரருளே நிரம்பப் பெற்ற அடிகள், மெய்யடியார்கள் எல்லோரும் நின் திருவடியைச் சார்ந்து பேரா இன்பத்தில் திளைத்து ஆனந்த பரவசராக அமர்ந்துள்ளார்கள். பொய்ய கிைய யான்மட்டும் புறமே போந்து தனித்து வருந்து கின்றேன் என அருள்பெருதாசைப் போன்று அழுங்கிக் கூறுவனவாகிய திருப்பாடல்களையுடைய இத்திருப்பதிகம், அடிகள் ஆனந்த பரவசராய்த் தன் வசமழிந்த நிலையினை இனிது புலப்படுத்துவதாகும்.

மாறிலாத மாக்கருணை வெள்ளமே எனத்தொடங்கும் பத்தாந் திருப்பதிகம் ஆனந்தாதீதம் என்னுந் தலைப் புடையது. ஆனந்தம் - மெய்யுணர்வில்ை நுகரத்தகும் பேரின்பம், அதீதம் - கடந்தநிலை, அஃதாவது பேரின் பத்தின் உயர்ந்த எல்லை. இதனை அதீத நிலைக்கண்ண தாகிய சிவத்துவ விளக்கம் எனப்படும் பரமககம் எனக் குறிப்பிடுபவர் சிவஞான முனிவர். இறைவனருளால் நிகழ் வது ஆனந்த விளக்கம். ஆனந்தத்தில் ஞான நிலையோடு தோய்தல் ஆனந்தத் தழுந்தல் என்றும், அத்தோய்வு முதிர முதிர ஆன்மா தன்வயமழிதல் ஆனந்த பரவசம் என்றும், இங்ங்ணம் தன் வசம் அழிந்தநிலையில் ஏற்பட்ட அதித நிலையே ஆனந்தாதீதம் என்றும் கூறுவர். இந்நிலையில் காண்பான், காட்சி, காணப்படுபொருள் என்னும் வேறு பாடில்லையாகும். தன்வசமழிந்த நிலையில் ஒரோவழிப் பண்டைப் பாசத்தொடர்பால் இதனை யான் நுகர்கின்றேன்" எனக் கருதும் தன்னுணர்வு முற்படுதலுங்கூடும். அதீத மாகிய கடந்த நிலையில் இத்தகைய நினைவு நிகழ்தற்கு இட மில்லை. இத்தகைய அதீதத்தின் இயல்பினை என நா னென்பதறியேன் பகலிரவாவதுமறியேன் எனவரும் அடி களது அநுபவ மொழியால் உணரலாம்.

அப்பனே யெனக்கமுதனே ஆனந்தனே அகம்

நெக அள்ளுறுதேன் ஒப்பனே உனக்குரிய அன்பரில் உரியகுயுனைப்

பருக நின்றதோர்

1. சிவஞானபாடியம்.

2. திருவாசகம், திருச்சதகம், கதிர்மணி விளக்கம்.