பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள்

போர் செய்தலும் பகைவர்பால் திறைகொள்ளுதலும் நண்ப சாகிய வேந்தர்க்கு இனியன புரிதலும் ஆகிய அரசியற் கடமைகளைத் திருத்தமுறச் செய்து வந்தார். தன்னலமற்ற அமைச்சர் தலைவராய் விளங்கும் அப்பெருந்தகையார், மதுரைச் சொக்கநாயகனுகிய சிவபெருமான்பால் அளவிலாப் பேரன்புடையராய்ச் சிவனடியார்க்கும் தம்முடைய சுற்றத் தார்க்கும் வேண்டுவன புரிந்து உலக மக்கள் அனைவர்க்கும் நலந்தரும் நல்லறங்களைச் செய்வாராயினர். இவரது அமைச்சுரிமைச் செயலால் பாண்டியனுக்கு முன்னையினும் பன்மடங்கு செல்வம் பெருகுவதாயிற்று. அதுகண்டு மன்னன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.

ஒரு நாள் பாண்டிய மன்னன் அரசவையிலே வீற்றி ருந்தபொழுது குதிரைத்துறைக் காவலாளர் சிலர் அரசன் திருமுன் வந்து வணங்கி நின்று, வேந்தர் பெருமானே, நம் சேனையைச் சேர்ந்த குதிரைகளிற் பெரும்பாலன பல வகை நோய்களால் இறந்து போயின. எஞ்சியுள்ளன சிலவும் மெலிவுற்று இறக்கும் நிலையி லுள்ளன. பகைவர் நாட்டினை வென்று கொள்ளும் மன்னவர்பால் ஒரு நூருயிரம் குதிரைகளேனும் அவசியம் வேண்டப்படுவன எனத் தெரிவித்தார்கள். அது கேட்ட பாண்டியன், வாதவூரரை அழைத்து அமைச்சர் தலைவரே, நம் குதிரைத்துறைக் காவலர் நம்முடைய குதிரைகளெல்லாம் நோயால் இறந்து போயின எனக் கூறிச் சென்ருர்கள். நீவிர் நம் கருவூலத்தி லிருந்து வேண்டுமளவும் பொருள்களை யெடுத்துக்கொண்டு குதிரைகள் வத்திறங்கும் கடற்றுறைப் பட்டினத்தை யடைந்து நீல்லிலக்கணம் வாய்ந்த சிறந்த குதிரைகளைத் தேர்ந்து வாங்கி வருவீராக’ எனப் பணித்தான். வாத ஆரரும் மன்னனை வாழ்த்தி அவ்வாறே விரைவிற் செய் வேன்' எனக்கூறி அரசன் பால் விடைபெற்று நிதியறையிற் சென்று வேண்டும் பொருள்களை யெடுத்துக்கொண்டு கணக்கிற் பதிவு செய்து அப்பொருளைப் பெட்டகத்திற்கட்டி நம்பிக்கைக்குரிய ஏவலாளர்களைத் தமக்குத் துணையாகக் கொண்டு அவர்களிடம் பொருட் பெட்டகத்தை ஒப்புவித்துப் பயனப்படுத்தினர்; திருவாலவாய்த் திருக்கோயிலை யடைந்து பொற்ருமரையில் நீராடி தியமங்கள் செய்து அங்கயற் கண்ணியொடும் அமர்த்த ஆலவா விறைவரைப் பணிந்து றிஞர், எல்லாம் வல்ல இறைவனே, பாண்டிய

துல்