பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் i83

தொழிற்படுத்து இயக்கும் காரனேசுரர்களையும் குறிப்பன வாகும். இதன் ஏழாந் திருப்பாடலில், நமச்சிவாய வென் றுன்னடி பணியாப் பேயணுகிலும் பெருநெறி காட்டாய்' எனவரும் தொடர், திரு ஐந்தெழுத்து உயிர்களின் வாசளு மலத்தை ஒழிப்பதாய் இறைவனை வழிபட்டு இன்புறும் பெரு நெறிக்குச் சாதனமாம் என்னும் உண்மையினைப் புலப்படுத் தில் அறியத்தக்கதாகும்.

உச. அடைக்கலப் பத்து

பேரிடர் செய்யும் பசுபாசப்பிறப்பிற்கு அஞ்சிய திருவாத வூரடிகள் தம்மை அப் பிணிப்பினின்றும் நீக்கி உணர்வற்ற உடைமைப் பொருள் போல் ஏன்றுகொள்ளும்படி இறைவனை வேண்டி அடைக்கலம்புகும் நிலையிற் பரவிப்போற்றிய பனுவ லாதலின் இஃது அடைக்கலப்பத்து என்னும் பெயருடைய தாயிற்று. அடைக்கலமாவது, தனக்கு இன்றியமையாத உடைமைப்பொருளைப் பகைவர் முதலியோராலுளவாம் கேடு களை நீக்கிப் பாதுகாத்துத் தரவல்ல தக்கவர்பால் ஒப்படைத்த லாகும். அடிமையாகிய தன்னை உணர்வுடைய உயிராகக் கருதாது உணர்வற்ற உடைமைப்பொருள் போன்று எண்ணி ஏன்று கொள்ளுமாறு இறைவன்பால் அடைக்கலம் புகுதல் அன்பிற்சிறந்த மெய்யடியார்களின் இயல்பாகும்.

" படைக்கல teraasi மைத் தெழுத் தஞ்சென் குவிற்

கொண்டேன் இடைக்கல மல்லேன் எழுபிறப்பும் முனக்காட் செய்கின்றேன் துடைக்கினும் போ கேன் தொழுது வணங்கித்து நீறணிந்துன்

அடைக்கலங் கண்டாய் அன்னிதின் லைச் சிற்றம்பலத் தரனே "

(4–81–8)

எனவரும் அப்பரடிகள் வாய்மொழி இங்கு நினைக்கத் தகுவ தாகும். பிறவித் துன்பத்திற்கு அஞ்சிய உயிர்கள் இறைவன்பால் அடைக்கலம் புகுதல் இன்றியமையாதது என்னும் உண்மையினை உலகினர்க்கு உணர்த்தும் முறையில் அடிகள் அடைக்கலப்பத்தினைப் பாடிப் போற்றியுள்ளார். இந்நுட்பம், ஒது வல்வாதனை வந்தனுகாமல் அடைக்கலப் பத் துரைத்ததாமே என்னும் திருப்பெருந்துறைப் புராணத் தால் இனிது புலளும், இதன் பாடல்தோறும் முடிவில் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே என அடிகள்

இறைவனை நோக்கி முறையிடுதல் காணலாம்.