பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பன்னிரு திருமுறை வரலாறு


மன்னனுக்குரிய பெரும் பொருளைக்கொண்டு அடியேன் முடிக்கக்கருதிய காரியம் இடையூறின்றி இனிது நிறைவேற அருள்புரிவாயாக’ என வேண்டி நின்ருள். அவ்வளவில் இறைவனைப் பூசிக்கும் இயல்பினராகிய அந்தணர் ஒருவர். திருவாதவூரரையடைந்து உவப்புடன் திருநீறு நல்கினர். திருவருள் வண்ணமாகிய அத் திருநீற்றினை ஆர்வமுடன் வாங்கி யணிந்து கொண்ட வாதவூரர், தாம் கருதிச்செல்லும் காரியம் நன்கு நிறைவேறுமென்னும் துணிபுடையராய் மகிழ்ந்து சேனைகள் சூழச் சிவிகையிலேறி மதுரையை விட்டுப் புறப்பட்டார். நெடுந்துாரஞ் சென்று வழியிடையே யமைந்த கானப்பேர் என்னுந் திருப்பதியை யடைந்து அங்குக் கோயில் கொண்டருளிய சிவபெருமான் திருவடி களைப் பணிந்து போற்றினர். பின் அங்கிருந்து புறப்பட்டுப் பலகாத துரங் கடந்து சென்று மொய்யார் தடம் பொய்கை யென்னுந் தீர்த்தச் சிறப்பமைந்த திருப்பெருந்துறையை அணுகினர்.

பெருந்துறை புகுந்த வாதவூரர். உள்ளமும் உரையும் வேறு தன்மையடைய, அன்பு கரைகடந்து மீதுரா, இரு கண்களிலும் நீரொழுக அழல் சேர் மெழுகென நெஞ்சம் நெகிழ்ந்துருகப் பெற்ருர் ; இதற்கு முன் செல்வத்தின் மேலிருந்த அவாவானது அற்றுப்போகத் தமது நெஞ்சம் ஒருவழி ஒடுங்குதலைக் கண்டார் ; மிகவும் வியந்தார் ; இவ்விடத்தில் ஏதோ ஒரு புதுமையிருத்தல் வேண்டுமென உணர்ந்தார் ; கொணர்ந்த பொருளுடன் இங்கேயே தங்கி யிருப்போம்' எனத் தம் மனத்துள் எண்ணினர்; தம்முடன் வந்த சேனைத்தலைவர் முதலிய ஏவலாளர்களை நோக்கி ஆடி மாதத்தில் குதிசை வருதல் இல்லை; ஆவணித் திங்களில்தான் வந்திறங்கும். அப்பொழுது நல்ல குதிரை களை யானே வாங்கிக்கொண்டு வருவேன். நீங்கள் இப் பொழுதே பாண்டிய மன்னனையடைந்து இச் செய்தியைத் தெரிவிப்பீராக’ என்று சொல்லி அவர்களைப் போகவிடுத் தார். ஏவலாளர்களும் அவ்வாறே மதுரைக்குச் சென்று மன்னனைப் பணிந்து வாதவூரர் கூறியவற்றைத் தெரிவித் தார்கள்.

இப்பால், திருப்பெருந்துறையில் தங்கிய வாதஆரர், பொய்கையில் நீராடித் திருநீறணிந்து சிவபெருமான வழிபடுதற்குத் திருக்கோயிலுள் தனியே புகுந்தார். அப்