பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் §

பொழுது கோயிலுள்ளேயமைந்த குருந்தமரத்தின் நிழலிலே தாரகை நடுவே தண்மதி விளங்குவது போன்று சிவனடியார் களாகிய மாளுக்கர்களுக்கு நடுவே சிவபெருமான் ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளியிருந்தார். அவ்வழகிய தெய்வக்காட்சியைக் கண்ட திருவாதவூரர், தம் செயலற்று உடல் நடுங்கி நிலத்தின் மீது விழுந்து பலமுறை பணிந்து நின்ருர், ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிய இறைவர், வாதவூரரை முடிமுதல் அடிவரையும் மந்திரங் களால் நோக்கி அருட்பார்வையால் உபதேசித்து அவரைத் தூயராக்கி முகமலர்ந்து முறுவலித்துத் தம் அருகேயழைத்து அவர்தம் முடிமிசைத் தம்திருவடிகளைச் சூட்டித் திருவைந் தெழுத்தின் உண்மையைச் செவிப்புலத்து அறிவுறுத்தி யருளிஞர். அந்நிலையே வாதவூரர் பரமஞானம் வந்தெய்தப் பெற்றுச் சிவஞானச் செல்வராயினர். அவரது நாவில் கலைஞானத் தெய்வமாகிய நாமகள் வந்து அமர்ந்தாள். ஆணவம் முதலிய மும்மலங்களும் அவரை விட்டு அகன்று ஒழிந்தன. குருநாதராகிய இறைவர். திருவாதவூரரை நோக்கி * அன்பனே, நீ சிவபுண்ணியஞ் செய்தமையால் மனத்தால் நாடியுனரும் பேற்றினைக் கண்களாற் காணப்பெற்றன; நம்மைப்பாடுவாயாக எனப் பணித்தருளினர். ஆசிரியர் பணித்த வண்ணம் திவாதவூரடிகள் திருவாசகமாகிய செழும்பாடல்களைப் பாடத்தொடங்கிச் சென்னிப்பத்து, அச் சோப்பத்து ஆகிய பனுவல்களைப் பாடிப் போற்றிஞர். இங்கனம் இறைவனது பொருள் சேர்புகழைப் போற்றிப் பரவும் திருவாதவூரர், அமைச்சர் கோலம் நீங்கி, முற்றத் துறந்து நான்மறை முனிவராய்த் திகழ்ந்தார்.

குருவாய் வந்தருளிய இறைவன், நான்மறையோதும் மாளுக்கர்களாகிய அடியவர் கூட்டத்தை வாதவூரடிகளுக்குக் காட்டி யருளினுன். அவர்களைக்கண்ட அடிகள் நண்பர்களே, நீங்கள் முன்னை நல்வினைப்பயனுள் ஈசனிடத்து அன்பு பூண்டு அவனைப் பிரியாதிருக்கப் பெற்றிர்கள். யானும் அன்பர்களாகிய நூம்மை அடையப்பெற்று மகிழ்கின்றேன்" என்று அதிசயப்பத்தினைப் பாடினர். அந்நிலையில் அருட்குரு வாகிய இறைவர். ' மாணிக்கவாசக, இங்கு தில் ' என்று சொல்லித் தம் மானுக்கர்களாகிய தெள்ளாயிர த்து தொண்ணுாற் ருென்பதின்மரோடும் விரைவில் மறைந்தார். அநதிலையில் ஆசிரியப் பெருமானையும் உடன்வந்த அடி