பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

பன்னிரு திருமுறை வரலாறு


அருளிய திருப்பதிகமாதலின் இது குழைத்தபத்து என்னும் பெயருடையதாயிற்று. இதன் கண்,

  • அன்றே யென் றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமுங்

குன்றே யனே சய் என்னை ஆட்கொண்ட போதே -

கொண்டிலேயோ இன்ருேர் இடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண்

எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நாளுே இதற்கு

நாயகமே " எனவரும் திருப்பாடல் இங்குச் சிறப்பாகக் குறிக்கத்தக்க தாகும். இப்பாடல் ஆன்ம நிவேதனத்தின் இயல்பினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

ஆன்ம நிவேதனமாவது, ' விஞ்ஞான தீக்கையின் உடல் பொருள்களோடு ஒப்ப ஆன்மாவாகிய தன்னையும் சற்குரவன் கையில் தானஞ்செய்து அளித்தும், தானஞ் செய்து அளித்த பொருள் என்று அறியும் அறிவு சலியாமைப் பொருட்டு நாளும் நாளும் சிவபூசையில் செப கன்மங்களோடு ஒப்பச் சிவோதாதா என்னும் மந்திரம் ஓதி ஆன்மாவையும் சிவன் உடைமையாகப் பூநீரொடு தானஞ்செய்து அளித்தல்" (சிவஞான பாடியம் - சூ- 6, அதி 2) என விளக்குவர் சிவஞான முனிவர்.

எனது உயிரை ஆண்டவணுகிய உனக்கு உரிமை செய்து அளித்தபின் என்னுயிர்க்கு உளவாகும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் யான் பொறுப்பாளி அல்லன் ' என்னை உடையாளுகிய நீயே அவற்றுக்கு உரியவன் என்பார், தீமை நன்மை முழுதும் நீ என்றும், நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே என்றும், ஆயக்கடவேன் நாளுேதான் என்னதோ இங்கு அதிகாரம், காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய்’ என்றும் அடிகள் இறைவனே நோக்கி முறையிட்டருளிய திறம் இங்கு நினைத்தற்குரியதாகும்.

க.ச. உயிருண்ணிப்பத்து

இறைவன் தன் அருள் எங்கும் பரவ உயிரின்கண் கலந்தவழி இவ்வியல்பிற்றெனப் பிரித்தறியவாராது ஆனந்த சொருபளுய் நிற்பன் ஆகலான், அங்ங்னம் உயிரின் அறிவாகிய பசுபோதத்தை உண்டு சிவபோதமே விளங்கித்