பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

பன்னிரு திருமுறை வரலாறு


யாளுகிய என்னே விழுங்கிவெறுந் தாய்ை நிலை நின்றது தற்பரமே (கந்தரநுபூதி.)

எனவரும் அருணகிரிநாதர் வாய்மொழியாலும் இனி துணரலாம்.

' உயிரை விட்டுச் சிவம் பிரியாது' என்னும் உண் மையை என்மெய்ந் நாள்தொறும் பிரியா வினைக்கேடா (1) என்ற தொடரில் அடிகள் குறித்துள்ளார். சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாதவளுய்த் திகழும் இறைவனை இப்பதிகத் தின் மூன்ருந் திருப்பாடலில் மனவாசகங் கடந்தான் என அடிகள் குறித்துள்ளமை மனவாசகங் கெட்ட மன்னனை (திருமந்திரம் - 2575) எனவரும் திருமூலர் வாய்மொழியை நினைவுபடுத்துவதாகும்,

கூடு. அச்சப் பத்து

நேயமலிந்தவர்களாகிய அடியார் திருக்கூட்டத்துடன் சிவானந்தத்தில் திளேத்து மகிழும் நிலையில், அடியா ரொருவர்தமர் நாம் அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை என்றவாறு, வினைவயத்தால் உலகியலில் எத்தகைய இடையூறுகள் நேரினும் அவற்றுக்குச் சிறிதும் உளங்கலங்காத தமது உள்ளத் திண்மையையும், தெய்வம் ஒன்றேயென்றும் அதுவே சிவபரம்பொருள் என்றும் தெளிந்துணரும் அன்பில்லாதவரொடு பழக நேரின், அன் ளுேர், உயிர்க்குயிராய் நின்று உபகரித்துவரும் முதல்வனது பெருங்கருணையை மறக்குமாறுசெய்து தீநெறிக்கட்கொண்டு சென்று மலங்களானுய பிறவிக்குழியில் வீழ்வித்துத் துயருறுத்துவராதலின், அவர்களே தம்மால் அஞ்சி விலகத் தக்க கொடியவர்களென்பதனையும் உலக மக்களுக்கு அறி வுறுத்தும் முறையில் அடிகள் இத்திருப்பதிகத்தினை அருளிச் செய்துள்ளார். இப்பதிகம் இவ்வுலக வாழ்க்கையில் அறி வுடையாரால் அஞ்சத்தக்கனவும் அஞ்சத்தகாதனவும் இன்ன இன்ன எனப் பகுத்துணர்த்துவதாகலின் அச்சப்பத்து என் னும் பெயருடையதாயிற்று.

" அடியார்களாகியயாம், வினைக்கடலுக்கும் மாதர் முறு வலுக்கும் பிணிகளுக்கும் ஐம்பூதங்களுக்கும் பழிகளுக்கும் களிறு புலி முதலிய கொடிய உயிர்களுக்கும் பகைவர் படைக் கலங்களுக்கும் சிறிதும் அஞ்சமாட்டோம்; ஆயினும் சிவபெரு மாகிைய முழுமுதற் கடவுளையன்றி மற்றைத் தேவர் எத்