பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 20?

மாயவுருக் கொண்டுளத்தை மயக்குமின்ஞர்

கண் வலையுள் மயங்குவேற்கிங் காயுமறி வளித்தாளல் அதிசயமென் றுரைத்தல் அற்புதப்பத்தாகும் ” எனத் திருப்பெருந்துறைப் புராணம் இப்பதிகக் கருத்தினைக் குறித்துள்ளமை அறியத்தக்கதாகும். இப் பதிகத்திற்கு அநுபவ மாற்ருமை - அநுபவம் முற்றுப்பெறுதலில் பொருமை விம்முதல் எனக் கருத்துரைப்பர் முன்னையோர்.

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு இவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே ' (குறுந்தொகை - 18 ) என்ருற் போன்று, இறைவனருளால் தமக்குக் கிடைத்த சிவானந்த அநுபவம் தம்மாற் பொறுக்க ஒண்ணுதவாறு மிக்கு விளங்குவதனை அடிகள் இத்திருப்பதிகத்தில் வெளி யிட்டருளினமை அறிந்து இன்புறத்தக்கதாகும். இப்பதிகத் தின் ஒன்பதாம் பாடலின் மூன்ரும் அடியில் விச்சகத் தரி யயனும் ” எனப் பாடங்கொண்டு, " வித்தகராகிய அயனும் அரியும் " எனப் பொருளுரைப்பர் சீகாழித் தாண்டவராயர்.

ச.உ. சென்னிப் பத்து

சிவபெருமான் குருவாகி வந்தருளித் தம் சென்னியில் திருவடி சூட்டியருளும் பேறுபெற்ற திருவாதவூரடிகள், அம் முதல்வனுடைய சேவடிகள் தமது சென்னியில் எப்பொழு தும் நிலைபெற்றுத் திகழும் அரிய சிறப்பினைத் தம்முடன் பொருந்திய அடியார்களுடன் மகிழ்ந்து பரவிப் போற்றிய திருப்பதிகம் சென்னிப்பத்து என்பதாகும். இறைவன் குரு வாகி வந்து தன் திருவடிகளே அடிகளது சென்னியிற் சூட்டி யருளிய இச் செய்தி, "என்னையும் ஒருவளுக்கி இருங்கழல், சென் னியில் வைத்த சேவக போற்றி " (போற்றித் திருவக வல்) எனவரும் அடிகளது வாய்மொழியாற் புலனும். இறை வன் தன் பொன்ஞர் திருவடிகளைச் சூட்டி அருள்செய்தமை யால் தமது சென்னிக்கு வாய்த்த பெருஞ் சிறப்பினை எண்ணி உவந்து போற்றிய பத்துப் பாடல்களேயுடைய பதிகமாதலின், இது சென்னிப்பத்து என்னும் பெயருடைய தாயிற்று.

இறைவன் திருவடிகளின் அருமையினைப் பரவிப் போற் றும் முறையில் அத்திருவடியினைப் பெற்ற தம் சென்னியின் சிறப்பினை அடிகள் இத் திருப்பதிகத்தில் விரித்துக் கூறி.

யுள்ளார். இந்நுட்பம்,