பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

பன்னிரு திருமுறை வரலாறு


" தூய வருட்குருபதத்தைச் சூட்டுதற்குப்

பெற்றவுயிர்ச் சுகத்தை நோக்கிச் சேய மலர்ப் பதத்தருமை அடிய சொடும்

வியந்துரைத்தல் சென்னிப்பத்தே எனவரும் திருப்பெருந்துறைப் புராணத்தால் இனிது புலனும்,

இறைவன் சேவடி தம்முடைய சென்னியில் மன்னி விளக்கும் பேரானந்தத்தை நினைந்து போற்றும் நிலையில் அடிகள் அருளிய பதிகம் ஆதலின், இதற்குச் சிவ விளைவு என முன்னேர் கருத்துரைத்தனர்,

o

தேவதேவன் மெய்ச்சேவகன் தென் பெருந்துறை நாயகன் மூவராலும் அறியொனுமுதலாய ஆனந்த மூர்த்தியான் யாவராயினும் அன்பரன்றி அறியொளுமலர்ச் சோதியான் தூய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னிமன்னிச் சுடருமே '

என்பது இப்பதிகத்தின் முதல் திருப்பாட்டாகும். இதன் கண் ஆனந்த மூர்த்தியாளுக விளங்கும் இறைவனுடைய தூயனவும் மென்மையுடையனவுமாகிய செந்தாமரை மலர் போலும் திருவடிகள், துய்மையற்றும் வல்லென்றும் உள்ள) என்னுடைய சிரசில் நிலைபெற்றுத் திகழ்கின்றன . என அடிகள் குறித்துள்ளமை காண்க. இங்கனம் இறைவ னுடைய திருவடிகள் என் சென்னியில் மன்னித் திகழ்தற்கு அத்திருவடிகளின் அருளின் நீர்மையே காரணம் அன்றி எனது தகுதி காரணமன்ரும் என்றவாறு. ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடியானும் (4-4-8) என அப்பரடிகள் போற்றியவாறு எங்கும் நீக்கமற நிற்பன இறைவன் திரு வடிகள் ஆதலின் சேவடிக்கணம்' என்ருர், கணம்-தொகுதி. இனி, சேவடிக்கள் நம் சென் னி மன்னிச் சுடரும் ' எனப் பிரித்து, ஏனைய அடியார்களையும் தம்முடன் உளப்படுத்திக் கூறியதாகவும் கொள்ளலாம். இவ்வாறன்றி, சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடரும் எனப் பிரித்துரைப்பின் மன் னுதலும் சுடர்தலும் ஆகிய நிலைபேறும் ஒளியுடைமையும் இறைவன் திருவடிக்கு ஆதலின்றித் தம் சென்னிக்கு ஆகு மாறு அடிகள் கூறியதாகக் கொள்ள வேண்டி நேரும். அங் ங்ணம் கொள்ளுதல் அடிகளது மனவியல்புக்கு ஒவ்வாத தொன்ரும். அன்றியும் "அப்பரமசிவனது மலர் மணம் ஒத்த பாத தாமரையான திருவருட் சோதி, என் போதச் சிரசிலே வியாபகமாகப் பிரகாசிக்கும் ” எனச் சீகாழித்