பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 213

பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்ருதே, திருமாமணிசேர் திருக்கதவம் திறந்தபோதே சிவபுரத்துத் திருமால் அறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே ' எனவும், புயங்கன் அருளமுதம் ஆசப்பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர் பொய்யிற் கிடந்து புரளாதே சிவன்கழற்கே போரப் புரிமின் எனவும் அறிவுறுத்துகின்ருர். ' போதர என்றது போர என இடைக்குறைந்து நின்றது. (திருக் கோவை 182 பேராசிரியர் உரை நோக்குக.)

இவ்வாறு தாம் அழைத்த நிலையிலும் பின்தங்கினரது நற்பேறின்மையை நினைந்து வருந்திய அடிகள், இன்றே வந்து ஆளாகாதீர் மருள்வீர், பின்னை மதிப்பார் ஆர்? மதியுட் கலங்கி மயங்குவீர், தெருள்வீராகில் இது செய்ம்மின், திருப் புயங்கன் அருள் அகலிடத்தே ஆர் பெறுவார் : அந்தோ அந்தோ அந்தோவே" என அருள் மிகுதியால் அரற்றி அழைக்கும் நிலையில் இத்திருப்பதிகத்தை நிறைவு செய் கின்ருர்.

இதன் கண் பாடல்தோறும் இறைவனைத் திருப்புயங் கன் என்ற திருப்பெயருடன் அடிகள் குறித்துள்ளமை கூர்ந்து நோக்கற்பாலதாகும். பூவார் சென்னி மன்னன்.” என்பதல்ை வியாக்கிரபாதரையும், புயங்கப்பெருமான்' என் பதல்ை பதஞ்சலி முனிவரையும் ஆட்கொண்டவன் இறை வன் என்ற குறிப்பினைச் சீகாழித் தாண்டவராயர் தம்

உரையிற் குறிப்பிடுவர்.

சசு. திருப்படை யெழுச்சி

உலக வாழ்க்கையில் தீக்குணங்களாகிய மாயப் படைகள் அடர்ந்து நெருங்கி மன்னுயிர்களை வருத்தாத வாறு இறைவனைப் பரவும் அருளார்ந்த நல்லோர் யாவரும், திரு நீருகிய கவசத்தை அணிந்து, இறைவன் அருளிய ஞானமாகிய வாட் படையினை ஏந்தி, மானம் என்னும் பெருங்குணமாகிய குதிரை மீது அமர்ந்து, மதிவெண்குடை கவிக்க, அருள்நாதப் பறை முழங்கப் புறப்படுங்கள்; நம் மைத் தடுக்கும் மாயப் படையினைப் புறங்கண்டு வானவூரைக் கைப்பற்றுவோம்’ என்றும், ' சரியையாளராகிய தொண்டர் களே ! நீங்கள் தூசிப்படையாக முன்னே செல்லுங்

பத்தி நெறியில் நிற்கும் பாங்குடையவர்களே இரு பக்கங்