பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

பன்னிரு திருமுறை வரலாறு


களிலும் சூழ்ந்து வளைக்க வல்ல கைகோட் படையாகச் செல் லுங்கள் ; ஒண்மையும் ஆற்றலும் வாய்ந்த யோகியர்களே ! நடுவிற் பெருஞ்சேனையாகச் செல்லுங்கள் உரன் என்னும் திண்மையும் செயற்கரிய செய்யும் திறமையும் வாய்ந்த சித்தர் களே ! நமது சேனை பின்னிடாதபடி பின்னணியாகிய கூழைப் படையாகக் கடைக்கண் நின்று செலுத்துங்கள் ; அல்லற் படை வந்து நம்மை வருத்தாதபடி முன் சென்று விலக்கி நாம் அண்டர் நாட்டினைக் கைப்பற்றி ஆள்வோம்” என்றும் திருவுடைச் செல்வர்களாகிய சிவஞான வீரர்களது பெரும் படையினை எழுப்பிச் செலுத்தும் முறையில் திருவாத வூரடிகள் அருளிய பனுவல் திருப்படை யெழுச்சி என்ப தாகும். திருவுடைய பெருமக்களாகிய சிவஞானச் செல்வர் களது சேனை புறப்பட்டெழும்படி அறிவுறுத்தும் பனுவலாத லின், இது திருப்படை யெழுச்சி யென்னும் பெயருடைய தாயிற்று. முன்னேர் இதற்குப் பிரபஞ்சப் போர் எனக் கருத்துரை வரைந்தனர். இருள் நிறைந்த வாழ்வில் மரு எாளும் மாயப்படை ஆன்மாவைப் பற்றி அலைக்காதபடி அருள் மறவரது படை யெழுக எனத் தூண்டுவது இத்திருப்

படை யெழுச்சி எனலாம்.

" அல்லாத துர்க்குண மாயப்படைகள் வாராமல்

அருள் வாள் ஏந்தி நல்லார்கள் யாரும் எம்மோ டெய்துமெனப்

படையெழுச்சி நவிறலாகும் "

என்பது திருப்பெருந்துறைப் புராணமாகும்.

திருப்படையெழுச்சி இரண்டு. பாடல்களையுடையது. முதற்பாடலில் படை வீரர்க்கு வேண்டிய போர்க் கருவிகள் இவை எனவும், இரண்டாம் பாடலில் தொண்டர், பத்தர், யோகிகள், சித்தர் ஆகிய நால்வகையினரும் முறையே தூசிப் படை (முன்னணிப் படை), கைகோட்படை (இரு பக்கங்களி லும் சென்று வளைக்கும் படை), பேரணி (நடுவே சென்று எதிர்க்கும் பெரும் படை), கூழைப்படை (பின்னணிப்படை) என அமைந்து மாயப்படையைப் புறங்கண்டு வானவூராகிய அண்டர் நாட்டைக் கைக்கொண்டு ஆளுதற்கேற்ற உரனு டைய சான்ருேர் எனவும் அடிகள் அணி நலம் அமைய விளக்கிய திறம் உணரத் தக்கதாகும்.