பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

பன்னிரு திருமுறை வரலாறு


அடியார்களைப் பேரின்ப வாழ்வில் நிலைபெறச்செய்து ஆளுந் திறன் நுதலியது இப்பனுவலாதலின் இதற்குத் திருப்படை யாட்சி என்ற பெயர் மிகவும் பொருத்தமுடையதேயாம்.

இப்பதிகத்திற் பயின்று வரும் ஆகாதே’ என்னும் சொல், அன்றே என்னும் சொற்போன்று அல்லவா’ என வினவும் குறிப்புடைய இடைச்சொல்லாகும். " நின் கரு நெடுங்கண் புதைத்தது இவற்குப் பெரியதோர் ஆற்ருமை யைச் செய்யுமென்ருகாதே? அவற்றின் பரத்தனவோ, சுரும் புடைக்கோதை நின்கரும்புடைத்தோள் ” (களவியல் ங்-ஆம் சூத்திரவுரை) எனவரும் இறையனர் களவியலுரையில் ஆகாதே’ என்னும் சொல் இப்பொருளில் ஆளப்பெற்றிருத் தல் இங்கு நினைக்கத்தக்கதாம். "ஆரூரானை மறக்கலும் ஆமே, என்றமையானும் ஆமென்கிளவி அன்றெனவும் அன் றென்கிளவி ஆமெனவும் காணத்தக்கது" என இச்சொல்லுக் குப் பொருளமைதி கூறுவர் காழித் தாண்டவராயர்.

இப்பனுவலின் இரண்டாந் திருப்பாடலில் ஒன்றினே டொன்றும் ஒரைந்தினுேடைந்தும் ' என்ற தொடர், முப்பத் தாறு தத்துவங்களைக் குறித்ததெனக் கொள்வர் தாண்டவ ராயர். ஒன்று என்னும் எண்ணுடன் ஒன்றிய ஐந்தும் ஐந்தும் முறையே ஆறு ஆறு 6X 6=36 என்ருகி, முதல் முப்பத்தாறே '. (திருமந்திரம் 125) எனத் திருமூலர் குறித்த முப்பத்தாறு தத்துவங்களையும் குறித்து நின்றன எனக்கொள்ளுதல் ஏற்புடையதேயாகும்.

" காரிகையார்கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே’ எனவும், "என்னணியார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறுமாகாதே’ எனவும் அடிகள் தம்மை இறைவனைக் காதலித்த நாயகியின் நிலையில் வைத்துக் கூறியிருத்தலும், இவ்வாறே செந்துவர்வாய் மடவார் இடரானவை சிந்திடு மாகாதே சேலனகண்கள் அவன் திருமேனி திளைப்பன வாகாதே’ எனவும், மின்னியல் நுண்ணிடையார்கள் கருத்து வெளிப்படுமாகாதே ' எனவும், செங்கயலொண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பனவாகாதே’ எனவும் தம்மையொத்த அடியார்களையும் இறைவனைக் காதலித்த மகளிர் நிலையில்வைத்துக் கூறியிருத்தலும் திருவாதவூரடிகள் இறைவனை ஆன்மநாயகனுகக்கொண்டு அயரா அன்பு செய் தொழுதிய சனமாாகக நெறியில் நின்றவர் என்பதனை நன்கு புலப்படுத்துவனவாகும்.