பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 2盛器

நூல்கள் ஐந்தும் அகப்பொரு ளொழுகலாற்றின் சிறப் பியல்பினை விரித்துரைக்கும் செந்தமிழ்ப்பனுவல்களாகும், பரிபாடல் என்னும் தொகைநூலிலும் சிலபகுதிகள் அகப்பொருளமைதியுடையனவாய் அமைந்திருத்தல் காண லாம். மேற்குறித்த அகத்திணைச் செய்யுட்கள் யாவும் அன்பும் அறமும் நிரம்பிய இன்ப வொழுக்கமாகிய இல் வாழ்க்கையின் இயல்பினை ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் ஆகிய இருவரது வாழ்க்கையில் வைத்து விளக்கும் இனிய செந்தமிழ் இலக்கியங்கள் என்பதனிை அறிஞர் பலரும் நன்குனர்வர்.

இவ்வுலகியல் வாழ்வில் ஒருவன் ஒருத்தி என்னும் இருவரிடையே நிகழும் கூட்டுறவினை ஒருதலைக் காமமாகிய கைக்கிளை எனவும், ஒத்த காமமாகிய ஐந்திணை எனவும், ஒவ்வாக் காமமாகிய பெருந்திணை எனவும் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. ஒருவன் ஒருத்தி என்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பிற்ை கூடி வாழ்தலில் அளவிறந்த வேட்கை யுடையராய் ஒழுக, மற்றவர் அவரது அன்பின் திறத்தை உணர்ந்துகொள்ள முடியாத நிலையினராக இவ்வாறு, அமைந்த தொடர்பு ஒருபக்கத்து உறவாதலின் அது கைக் கிளை எனப் பெயர் பெறுவதாயிற்று. கை - பக்கம். கிளை - உறவு. கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். இனி, ஒருவன் ஒருத்தியாகிய இருவரும் தம்முள் அன்பின்றிக் கூடிவாழும் ஒழுகலாறு பெருந்திணை எனப்படும். கணவன் மனைவிய ரிடையே நிகழும் இத்தகைய உளம்பொருந்தா வாழ்க்கை உலகியலிற் பெரும்பான்மையாகக் காணப்படுதலால் இதற். குப் பெருந்தினை யெனப் பெயரிட்டனர் முன்னேர். பெருந் திணை - உலகத்திற் பெரும்பான்மையாக நிகழும் ஒழுகலாறு. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். பல பிறவிகள் தோறும் கணவனும் மனைவியுமாகப் பிரிவின்றி ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடையார் இருவர், வேறு வேறிடங்களிற் பிறந்து வளர்ந்தனராயினும், இறைவனது ஆணையாகிய நல்லூழின் செயலால் ஓரிடத்தெதிர்ப்பட்டு நெஞ்சுகலந்து ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் அன்பினுற் கூடிவாழும் ஒழுகலாறு அன்பின் ஐந்திணை. எனப்படும். ஒத்த அன்பினராகிய இவ்விருவரும் அன்பினுல் அளவளாவி ஒருங்கு கூடியிருத்தலும், இவருள் கணவன் உலகியற் கடமை கருதிச் சிலநாள் மனைவியைப் பிரிந்து

15