பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 2:g

பாடப்பெறுதல் பற்றி இஃது ஐந்திணைக் கோவை எனவும் வழங்கப்பெறும்.'

அகத்திணைக் கோவையாகிய இப்பிரபந்தம் கட்டளைக் கலித்துறை யாப்பில் இயற்றப்பெறுதல் மரபு. அகப் பொரு ளொழுகலாற்றினைப் பாடுதற்குக் கலிப்பா, பரிபாடற்பா ஆகிய இருவகைப் பாக்களே சிறப்புரிமை யுடையன எனத் தொல்காப்பியனர் கூறியுள்ளனர். அவர் காலத்திற்குப் பின் தோன்றிய சங்கத்தொகை நூல்களுள் கலித்தொகையும் பரிபாடலும் தவிர ஏனைய தொகை நூல்கள் யாவும் ஆசிரியப்பாவாகிய யாப்பிலேயே இயற்றப் பெற்றுள்ளன. அகத்திணை யொழுகலாறுகளை ஒரு கோவைப்படத் தொகுத்துக் கோவைப் பிரபந்தம் பாட எண்ணிய பிற்காலச் சான்ருேர், தொல்காப்பியஞர் கருத் தினைப் பின்பற்றித் தாம் பாட எடுத்துக்கொண்ட கோவை யினைக் கலிப்பாவின் இனமாகிய கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைத்துப் பாடுதலை வழக்கமாகக் கொண்டனர். இவ்வாறு கட்டளைக் கலித்துறை யாப்பு அகத்திணைக் கோவைக்குச் சிறப்புரிமையுடையதாகக் கொள்ளப் பெற்ற மையால் அதற்குக் கோவைக் கலித்துறை என்றதொரு பெயரும் தோன்றி வழங்குவதாயிற்று."

கலிப்பாவின் இனமெனப்படும் கட்டளைக் கலித்துறை யாப்பு காரைக்காலம்மையார் அருளிய திருவிரட்டை மணிமாலையில்தான் முதன்முதற் காணப்படுகிறது. கட்டளைக் கலித்துறையாப்பு கி. பி. ஏழாம் நூற்ருண்டில் தோன்றிய தேவாரத் திருமுறைகளிலும் திவ்யப் பிரபந்தங்களிலும்

பயின்று வழங்கக் காண்கின்ருேம்.

1. திருந்து தமிழிலக்கண ஐந்திணைக் கோவை

விருத்தகிரிச் செல்வற்கோதும் பெருந்தகைமை புடையம் யாம் '

எனவரும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் பாடலில் இப்பெயர் வழக்கம் இடம் பெற்றிருத்தல் காண்க.

ஐந்திணைக் கோவைத் துறைகளுள் ஒருதுறையினையே பொருளாகக் கொண்டு பிற்காலத்திற் பாடப் பெற்ற கோவைகள் ஒருதுறைக் கோவை என்ற பெயரால் வழங்கப் பெறுதலும் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

2. வீரசோழியம் யாப்புப் படலம் 17-ஆம் செய்யுள் உரை நோக்குக.