பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

பன்னிரு திருமுறை வரலாறு


லானும், அங்ங்ணம் வகுத்துரைக்கப்பெறும் இருவேறு துறை களுக்கும் அடிப்படையாக அவ்வப் பாடல்களுக்குரியகொளு ஒன்றே பொருந்தியமைந்திருத்தலானும், 370-ஆம் பாட லுரையில், 'கயன்மணிக் கண்ணியென்பது பாடமாயின், பரத்தையர் சேரிக்கட் டலைமகனது தேர்செல்லத் தலைமகள் நொந்துரைத்ததாம்" எனப் பேராசிரியர் கொளுவினை அடி யொற்றி வேறு துறைவிளக்கம் கூறுதலானும் இவ்வுண்மை உய்த்துணரப்படும்.

திருக்கோவையின் கருத்துரைப்பகுதிகளாகிய கொளுக் களைப் பாடிய ஆசிரியர் இன்னரெனத் தெரியவில்லை. ஆயினும் இக்கொளுக்கள் திருவாதவூரடிகள் காலத்தை யொட்டியோ அல்லது அவர்காலத்திற்குப்பின்னரோ கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டிற்கு முன்னரே இயற்றப்பெற்று இத்திருக்கோவையில் இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்று தெரிகிறது. திருக்கோவை 158-ஆம் பாடலுரையில், " இக் கருத்தேபற்றி உதவி நினைந்து குறை நயந்ததென்னுது அவனது ஆற்ருமை நிலைமை கேட்டுக் குறைநயந்த தென்ருர் ' எனப் பேராசிரியர் வரைந்த உரைக்குறிப்பாலும் இவ்வாறே அவ்வாசிரியர் பாடல்தோறும் கொளுச் சொற் களுக்கு வரைந்துள்ள உரைக் குறிப்புக்களாலும் இக் கொளுக்களின் தொன்மை புலம்ை. இத்தகைய கருத்துரைப் பகுதிகளாகிய கொளுக்களைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியராகிய ஐயனரிதர்ை தாம் சொல்லக்கருதிய துறை யின் விளக்கமாகத் தம் நூலில் அமைத்துள்ளார். திருக் கோவையாருக்கு அமைந்த கொளுக்கள் அவ்வப் பாடல் களில் அமைந்த துறைகள் இவையென அறிந்து கொள்ளுதற்குக் கருவியாக அமைந்திருத்தலும், புறப் பொருள் வெண்பாமாலையிலுள்ள கொளுக்கள் அந்நூலிற் குறித்த துறைகளுக்குரிய விளக்கமாக அமைந்திருத்தலும் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாம்.

திருவாதவூரடிகள் அருளிய திருச்சிற்றம்பலக் கோவை இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன்படுத்தல், இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல், முன்னுறவுணர்தல், குறையுற வுணர்தல், நாண நாட்டம், நடுங்க நாட்டம், மடல், குறைநயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், உடன்போக்கு, வரைவு முடுக்கம், வரைபொருட் பிரிதல், மணஞ்சிறப்புரைத்