பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 233

தல், ஒதற்பிரிதல், காவற்பிரிதல், பகைதணி வினைப்பிரிதல், வேந்தற் குற்றுழிப்பிரிதல், பொருள்வயிற் பிரிதல், பரத்தை யிற் பிரிதல் என இருபத்தைந்து கிளவிக் கொத்துக்களாகப் பகுக்கப்பட்ட இருபத்தைந்து அதிகாரங்களையுடையதாகும்.

இயற்கைப் புணர்ச்சி யென்பது, அன்பினுலும் குணத்தி ஞலும் கல்வியினலும் உருவிலுைம் திருவிலுைம் பருவத்தி குலும் ஒத்த ஒருவன் ஒருத்தியாகிய இருவரும், ஒருவரை யொருவர் முன் அறிந்து கொள்ளாத நிலையில் ஒரு பொழி லிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடை நிற்பப் பான்மை வழியோடி ஓர் ஆவிற்கு இருகோடு தோன்றிற்ை போலத் தம்முள் ஒத்த அன்பினராய்க் கொடுப்பாரும் அடுப்பாரு மின்றித் தம்முள் தாமே கூடும் கூட்டம். இவ்விருவரும் இவ் வாறு இன்ன இடத்தில் இன்ன பொழுதிற் காணவேண்டும் என்னும் எண்ணமும் முயற்சியும் இன்றி நல்லூழின் செய லால் தம் இயல்பில் எதிர்ப்பட்டுக் கூடினராதலின் இஃது இயற்கைப் புணர்ச்சி யெனப்பட்டது. இவ்வாறு ஒருவர்க்கு முயற்சியும் உளப்பாடும் இன்றி ஒரு காரியம் கைகூடின இடத்து அது தெய்வத்தின்ை ஆயிற்று என்பது உலகிய லாதலின், இது தெய்வப் புணர்ச்சியெனவும் கூறப்படும். இது காட்சிமுதல் பாங்கியை யறிதல் ஈருகப் பதினெட்டுத் துறைகளையுடையது.

இவ்வாறு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தன் அன்புக்குரிய தலைவியை மணந்துகொண்டு இல்லறம் நடத்துதல்வேண்டும் என்னும் தெளிவு பெற்றுத் தலைமகளை மணந்து கொள்ளுதல் தக்கது. அங்ங்ணம் தெளியாளுயின் தன் பாங்களுலாவது இடந்தலைப் பாட்டினுலாவது இவ் விரண்டனுள் ஒன்ருல் தலைவியைச் சென்று எய்துதல் முறைமை என்பர்.

அவற்றுள், பாங்கற் கூட்டமாவது, தலைமகன் தன் அன்பிற்கினிய தோழனுகிய பாங்கனது இசைவு பெற்றுத் தலைமகளைக் கூடுங் கூட்டமாகும். பாங்கனை நினைதல் முதல் நின்றுவருந்தல் ஈருகவுள்ள துறைகள் முப்பதும் பாங்கற்கூட்டத்திற்குரியனவாம்.

இனி, இடந்தலைப்பாடு, என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் மறுநாளும் முன்தான் தலைமகளைக் கண்ட அதே இடத்தினைத் தலைப்பட்டுத் தலைமகளைக் கண்டு