பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

பன்னிரு திருமுறை வரலாறு


நூல் ஒழுக்கம்" என்பவாகலின் தமிழியல் நூலாகிய தொல் காப்பியத்தினும் இறையனர்களவியலினும் சங்கச் செய்யுட்க ளினும் உலகியலொழுகலாறு பற்றி எடுத்தோதப்பட்ட களவு கற்பு என்னும் அகத்திணையின் இன்ப வரலாறே இத்திருக்கோவையில் விரித்து விளக்கப்பெறும் உலகநூல் வழக்காகும்.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினும் இன்பத்தை நுதலிய களவொழுக்க மாகிய அகத்திணை யொழுகலாற்றினை விரித்துரைக்க எழுந்த நூல் இத்திருக்கோவையாயினும், இப்பனுவலின் பாட்டுடைத் தலைவனுகிய தில்லையம்பலக் கூத்தனையும், அம் முதல்வன் உலகெலாம் உணர்ந்து உய்யும் வண்ணம் ஐந் தொழில் திருக்கூத்தியற்றியருளும் பரஞான அருள் வெளி யாகிய தில்லைச் சிற்றம்பலத்தையும் போற்றிப் பரவும் முறையில் அமைந்த இந்நூற் பகுதிகள், அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருளுடன் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீடுபேற்றின் திறத் தினையும் இனிது புலப்படுத்தும் முறையில் அமைந்திருத்த லால், அறம் பொருள் இன்பம் வீடென்னும் நாற்பொருள் களையும் பயக்கும் நிலையில் திருவாதவூரடிகளால் அருளிச் செய்யப் பெற்றது. இத் திருச்சிற்றம்பலக் கோவை யெனக் கூறுதல் பொருந்தும்,

பாட்டுடைத் தலைவர்க்குரிய பெயரொடும் ஊரொடும் சார்த்திக் கூறும் அடைமொழி எதுவுமின்றித் திருக்கோவை எனவும், உயர்த்தற் பொருளதாகிய ஆர்விகுதி புணர்த்துத் திருக்கோவையார் எனவும், ஆன்ருேர் பலரும் இத் திருச் சிற்றம்பலக் கோவையினை வழங்கி வருதலால், அகத்திணைக் கோவைகள் எல்லாவற்றினும் மேம்பட்டு விளங்கும் தனிச் சிறப்பு வாய்ந்தது இத்திருச்சிற்றம்பலக் கோவையே என் பது நன்கு தெளியப்படும். உயர்வறவுயர்ந்த திருவருட் பனுவலாகிய இதன் சிறப்பினை,

வருவாசகத்தினின் முற்றுணர்ந்தோனை வண்டில்லை

மன்னைத் திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார்.தரு திருக்கோவை கண்டேயுமற்றப் பொருளைத் தெருளாதவுள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பரே !

(கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் செய்யுள் - 58)