பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 243

எனவரும் திருப்பாடலில் நம்பியாண்டார் நம்பிகள் உளமுருகிப் பாராட்டியுள்ளமை இங்கு நோக்கத்தக்க தாகும்.

திருச்சிற்றம்பலக்கோவையின் பொருள் நலம் விளங்கும் வண்ணம் தெளிந்த செந்தமிழ் நடையில் திட்ப மும் நுட்பமும் அமைய அழகியதோர் உரையினை வரைந் தவர் பேராசிரியர் ஆவர். இவ்வுரை, முதன்முதல் அச்சில் வெளிவந்த பொழுது நச்சிளுர்க்கினியர்உரை யெனக் கருதப்பட்டது. நச்சிஞர்க்கினியர் உரை வரைந்த நூல் களைத் தொகுத்துக் கூறும் பழைய வெண்பாவில் அவ் வாசிரியர் இத்திருக்கோவைக்கு உரைவரைந்தார் என்ற செய்தி குறிக்கப்படாமையாலும், பிரயோக விவேக நூலுடையார் திருக்கோவையாருரையிற் குறிக்கப்பெற் றுள்ள இலக்கணக் குறிப்புக்கள் சிலவற்றைத் தம் நூலில் எடுத்துக்காட்டுங்கால் திருக்கோவையார்க்கு அமைந்த இவ் வுரையினை யியற்றியவர் பேராசிரியர் எனத் தெளிவாகக் குறிப்பிடுதலாலும் திருக்கோவையார் உரையாசிரியர்

பேராசிரியரே என்பது நன்கு துணியப்படும்.”

பேராசிரியரால் இயற்றப்பெற்ற இவ்வுரை, இத்திருக் கோவையின் வாயிலாகத் திருவாதவூரடிகள் உணர்த்த எடுத்துக்கொண்ட அறிவனுற் பொருளும் உலகநூல் வழக்கும் ஆகிய இருதிறப் பொருள்களையும் இனிது விளக்கும் முறையில் அமைந்துள்ளது.

'ஆகம நூல் வழியின் நுதலிய ஞான

யோக நுண் பொருளினை யுணர்த்துதற்கு அரிது : உலகநூல் வழியின் நுதலிய பொருள் எனும் அலகில் தீம்பாற் பரவைக்கண் எம் புலன் எனும் கொள்கலன் முகந்தவகை, சிறிது உலேயா மரபின் உரைக்கற் பாற்று '

1. பிரயோக விவேகம் 24-ம் பாடல் உரை.

2. தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடாகவும் பின் திருப்பனந்தாள் பூரீ காசி மடத்தின் வெளியீடாகவும் வெளி யிடப் பெற்ற திருக்கோவையார் - பழைய வுரை என்பது மேற் குறித்த பேராசிரியர் உரையினைத் தழுவிச் சுருக்கமும் எளிமையும் அமையப் பின் வந்த சான்ருேரொருவரால் எழுதப்பட்ட புதிய வுரையாகும். இவ்வுண்மை அவ்வுரையில் ஆங்காங்கே விரவியுள்ள பிற்காலச் சொல் வழக்குக்களால் உய்த்துணரப்படும்.