பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 驾盛岛

கொண்டு தலைவன் தலைவி ஆகிய அகத்திணை மக்களின் ஒழுகலாறுகளைக் கேட்போர் மனத்தினுல் உய்த்துணர்ந்து கொள்ளுமாறு அமைதல் இவ்வுள்ளுறை யுவமத்தின் இயல் பாகும். " யான் வெளிப்படக் கூறிய இக்கருப்பொருள் நிகழ்ச்சியுடன் வெளிப்படக் கூருத உவமிக்கப்படும் பொரு ளும் ஒத்துப் புலப்படுவதாகுக ” எனப் புலவன் தன்னுள் ளத்தே கருதி, அதனைப் படிப்போர் கருதியுணர் தற்கேற்ற சொல்லெல்லாம் செய்யுளகத்தே அமையுமாறு கொண்டு கூறப்படுவதே உள்ளுறையுவமம் எனப்படும். இவ்வாறன்றி வண்ணம் வடிவு பயன் தொழில் என்னும் இப்பொதுத் தன்மைகளால் உவமிக்கப்படும் பொருளோடு இயைத்துக் கூறப்பட்டு வெளிப்படையாகப் பொருள் விளக்குவது ஏனை யுவமம் எனப்படும். இவ்விருவகை உவமங்களும் அகத் திணைப் பொருளையுணர்தற்குச் சிறந்த கருவியாம் என்பர் அறிஞர்.

அகத்திணை யிலக்கியமாகிய இத்திருக்கோவைக்கு உரை வரைந்த பேராசிரியர் அகப்பொருளையுணர்தற்குக் கருவி யாய் இந்நூலிற் பயின்ற உள்ளுறையுவமைகளை உய்த் துணர்ந்து விளக்கியுள்ளார். திருக்கோவையார் 99, 128, 133, 159, 168, 193,250, 252, 254, 260, 262, 264, 265, 276, 369, 377, 380-ஆம் பாடல்களின் உரையில் அவ்வப் பாடல் களில் அமைந்த உள்ளுறையுவமை யிதுவெனத் தெளிவாக விளக்கப் பெற்றிருத்தல் காணலாம்.

களவொழுக்கம் ஒழுகா நின்ற தலைமகன் தலைமகளை யடைய விரும்பித் தோழியைக் குறையிரந்து வேண்டி நின்ரு கை, தோழி " யான் குற்றேவல் மகளாதலின் நினது குறை யினைத் தலைமகளிடத்துத் துணிந்து சொல்ல முடியாதவளாக உள்ளேன் ; இனி நீயே அவள்பாற் சென்று நின்குறை யுள்ளது சொல்வாயாக’ எனத் தான் உடம்படாது மறுத்துக் கூறுவதாக அமைந்தது.

அந்தியின் வாயெழி லம்பலத்தெம்பரன் அம்பொன் வெற்பிற் பந்தியின் வாய்ப் பலவின் சுளை பைந்தேளுெடுங் கடுவன் மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்சிலம்ப மனங்கனிய முந்தியின் வாய்மொழி நீயேமொழி சென்றம்மொய்குழற்கே.

(திருக்கோவை-99) எனவரும் திருப்பாடலாகும். அந்திப்பொழுதின்கண் உண் டாகிய செவ்வானத்தின் எழிலையுடைய அம்பலத்தின்கண்