பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

பன்னிரு திருமுறை வரலாறு


உளளுகிய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனுகிய எம் முடைய இறைவனது அழகிய பொன்னையுடைய மலை யிடத்தே பந்தியாகிய நிரையின்கண்ணே ஆண் குரங்கானது இனிய பலாச்சுளையைச் செவ்விய தேனெடும் (தன் துணை யாகிய) பெண் குரங்கின் வாயிலே அருந்தக் கொடுத்துப் பாதுகாக்கும் மலைப் பக்கத்தையுடைய தலைவனே, அவளது மனம் நெகிழுமாறு இவ்வினிய மொழிகளை அம்மொய்த்த குழலையுடையாளாகிய தலைமகட்கு நீயே சென்று கூறு வாயாக ' என்பது இதன் பொருளாகும். இத்திருப்பாடலில் * பந்தியின்வாய்ப் பலவின் சுளை பைந்தேனெடுங் கடுவன், மந்தியின் வாய்க்கொடுத்து ஒம்பும் என்றது, உள்ளுறை யுவமமாக வந்த கருப்பொருள் நிகழ்ச்சியாகும். மந்திபெண் குரங்கு. கடுவன்-ஆண் குரங்கு. " மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் கடுவன் தானே கொடுத்து மன மகிழ்வித்தாற் போல, அவள் (தலைமகள்) உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மனமகிழ்விப்பாயாக ' என உள்ளுறை யுவமங் கண்டு கொள்க " என்பது, இதற்குப் பேராசிரியர் தரும் விளக்கமாகும். இவ்வாறே ஏனைய திருப்பாடல்களில் உள்ள உள்ளுறையின் இயல்பினையும் பேராசிரியர் தெளிவாக விளக்கியுள்ளமை உணர்ந்து மகிழத் தக்க தாகும்.

செய்யுளில் வெளிப்படச் சொல்லப்பட்ட பொருளின் புறத்தே தங்கிய குறிப்புப் பொருளை இறைச்சி என வழங்கு தல் மரபு. " இறைச்சிப் பொருள் என்பது, உரிப்பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள் அஃதாவது, கருப் பொருளாகி நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது” என்பர் இளம்பூரணர்.

களவொழுக்கம் ஒழுகாநின்ற தலைமகன், கழுநீர் மலரைக் கையுறையாகக் கொண்டு சென்று அதனை ஏற்றுக் கொள்ளும்படி தோழியை வேண்ட, அவள் தெய்வத்திற் குரிய அம்மலர் எங்குலத்திற்கு இசையாது’ எனக் கூறி மறுப்பதாக அமைந்தது,

நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி

மறமனை வேங்கையென நணியஞ்சு மஞ்சார் சிலம்பா குறமனை வேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ நிறமனை வேங்கையதள் அம்பலவன் நெடுவரையே (96)