பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 251

எனவரும் திருப்பாடலாகும். இதன்கண் நாகம் என்றது யானையை. அணங்கலர் என்றது, தெய்வத்திற்குரிய கழு நீர் முதலாகிய பூக்களை. தேனிற்கு இடமாகிய வேங்கைப் பூக்கள் நிறைந்துள்ள பாறையை யானை சென்றணைந்து (அப்பாறையைத்) தறுகண்மைக்கு இடளுகிய புலியென்று (எண்ணி) மிகவும் அஞ்சும் மேகந்தவழும் மலையினையுடைய தலைவனே, நிறந்தங்கிய புலித்தோலை அணிந்த அம்பல வனது நீண்ட இம்மலையின்கண்ணே குறவர் மனையில் உள வாகிய வேங்கையினது சுணங்குபோலும் பூக்களோடு தெய்வத்திற்குரிய கழுநீர் முதலாகிய பூக்களைக் கூட்டுவரோ கூட்டார் ' என்பது இதன் பொருளாகும்.

இதன்கண் வேங்கை மலர்களால் மூடப்பெற்றுள்ள கற் பாறையைக் கண்ட யானையானது, அதனைப் புலியென எண்ணி அஞ்சும் நாடன் எனத் தலைவனுக்கு அமைந்த அடைமொழி, இறைச்சிப் பொருள்பட வந்ததாகும். ஒன் றனைப் பிறிதொன்ருகப் பிறழவுணரும் நாடன் ஆதலால், தெய்வத்திற்குரிய நறுமலரைச் சூடாத குறமகளிராகிய எம்மை அம்மலரைச் சூடுவேமாகப் பிறழ வுணர்ந்தாய் ' என் பது இதன்கண் அமைந்த இறைச்சிப் பொருளாகும். ஒத்த தோற்றம் உடைமை ஒன்றேபற்றி, அஞ்சப்படாததனையும் அஞ்சுதற்கு இடஞயது எமது மலைநிலம் ஆதலால், எம் குலத்திற்கு ஏலாததாய் நீ தரும் தெய்வ மலரைச் சூடுதற்கு யாம் அஞ்சுதல் சொல்லவேண்டுமோ எனக் கூறித் தோழி மறுத்ததாக இறைச்சிப் பொருள் கொள்ளினும் பொருந்தும் என்பர் பேராசிரியர்.

இத்திருக் கோவையிற் கூற எடுத்துக் கொண்ட அகத்திணையொழுகலாற்றினை உணர்தற்குக் கருவியாய உள்ளுறை, இறைச்சி என்பவற்றைப் போலன்றி, அவ் வொழுகலாற்ருேடு தொடர்பில்லாததாய் இரட்டுற மொழித லால் பிறிதொரு பொருள் விளங்கித் தோன்றும் பாடல்களும் உள்ளன. இவ்வாறு கூற எடுத்துக் கொண்ட அகப்பொரு ளொழுகலாற்றிற்கு அயன்மையுடையதாய்த் தோன்றும் இப்பொருளைப் பேராசிரியர் நுண்ணிதின் உணர்ந்து இவற்றை வேறும் ஒரு பொருள் ' என எடுத்துக் காட்டி யுள்ளார். இங்ங்னம் இத்திருக்கோவையாரில் வேறும் ஒரு பொருள் தோன்ற அமைந்தவை 39, 158, 281, 349, 352, 365, 394-ஆம் திருப்பாடல்களாகும்.