பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž

§

2

பன்னிரு திருமுறை வரலாறு

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பின் பாங்கனைக் கண்டு அவனுல் தெருட்டப் பெற்று அவனது இசைவு பெற்றுத் தான் முன்னுளில் தலைவியை எதிர்ப்பட்ட பொழிலையடைந்து அங்கு நின்ற தலைமகளைக் கண்ணுற்று என்னுயிர் இவ்வாறு செய்து நிற்பதோ எனத் தலைவி யைத் தனது உயிர் என வியந்து கூறுவதாக அமைநதது,

நேயத்ததாய் நென்னல் என்னைப் புணர்ந்து நெஞ்சந்

நெகப்போய் ஆயத்ததாயமிழ் தாயணங்காயர னம்பலம்போல் தேயத்ததாய் என்றன் சிந்தையதாய்த் தெரியிற் பெரிதும் மாயத்ததாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே

(திருக்கோவை-39) எனவரும் திருப்பாடலாகும்.

"நெருநல் (நேற்று உள்ளநெகிழ்ச்சியை யுடைத்தாய் என்னைக் கூடிப் பின் நேயம் இல்லது போல என் நெஞ்சு உடையும் வண்ணம் நீங்கிப் போய், ஆயத்தின்கண்ணதாய், இன்பத்தைச் செய்தலின் அமிர்தமாய், துன்பத்தைச் செய்த லின் அணங்காய், புலப்படும் தோற்றப்பொலிவால் இறை வனது பொன்னம்பலம்போலும் ஒளியையுடைத்தாய், புலப் படாது வந்து என் சிந்தையின் கண்ணதாய், ஆராயிற் பெரிதும் மாயத்தையுடையதாய் வந்து நின்றது இதுவோ எனது மன்னுயிர் " என்பது இதன் பொருளாகும். நேய முடைமையும் நேயமின்மையும், இன்பஞ் செய்தலும் துன்பஞ் செய்தலும், புலப்படுதலும் புலப்படாமையும் ஒருபொருட்கு இயையாமையின், பெரிதும் மாயத்ததாகி ' என்ருன் தலைவன். தேயம்-ஒளி.

" என்மாட்டு அருளுடைத்தாய் முற்காலத்து என்னை வந்து கூடி, அருளில்லதுபோல என் நெஞ்சு உடையும் வண்ணம் போய்த், தன் மெய்யடியார் குழாத்ததாய், நினை தோறும் அமிர்தம்போல இன்பஞ்செய்து, கட்புலனுகாமை யின் துன்பஞ்செய்து, அம்பலம் போலும் நல்ல தேசங்களின் கண்ணதாய் வந்து என் மனத் தகத்ததாய், இத்தன்மைத் தாகலின் பெரிதும் மாயத்தையுடைத்தாய் எனது நிலைபெறும் உயிர் வந்து தோன்ரு நின்றது ' என வேறும் ஒரு பொருள் விளங்கியவாறு கண்டுகொள்க’ எனப் பேராசிரியர் இத் திருப்பாடலிற் ருேன்றிய மற்ருெரு பொருளை எடுத்துக்

காடடியுளளாா.