பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

பன்னிரு திருமுறை வரலாறு


தந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப" என்பது உம் அக்கருத்தேபற்றி வந்தது'என இத்தொடர்ப்பொருளை விளக்குவர் பேராசிரியர். 116-ஆம் திருப்பாடலில், 'வான்உழைவாள், அம்பலத்து அரன்' எனவரும் தொடர்க்கு, ' இருட்கு அப்பாலாகிய வானிடத்து உண்டாகிய ஒளி ; இவ்வண்ணம் சேயனுயினும் அணியனுய் அம்பலத்தின்கண் உளளுகிய அரன். அண்டமா ரிருளுடு கடந்தும்பர், உண்டுபோலும் ஓர் ஒண் சுடர்' என்ப தூஉம் அப்பொருள்மேல் வந்தது' எனப் பொருள் கூறி மேற்கோள் காட்டியிருத்தலும், 375-ஆம் திருப்பாடலில் வரும் தில்லையிறையமைத்த திறலியல்யாழ் என்னுந் தொடர்க்கு ' தில்லையிறையால் அமைக்கப்பட்ட வெற்றியிய லும் யாழ் ' எனப் பொருள் கூறி, ' வெற்றி - விணைகளுள் தலையாதல். 'எம் இறை நல் வீணை வாசிக்குமே ' என்ப வாகலின் இறை அமைத்த யாழ் என்ருர் ' என விளக்கம் தந்திருத்தலும் திருநாவுக்கரசர் அருளிய தேவாரப் பதிகங் களில் பேராசிரியர்க்கு உள்ள பயிற்சியினை நன்கு புலப் படுத்துவனவாம்.

சிலம்பணி கொண்டசெஞ் சீறடிபங்கன், தன்சீரடியார் குலம்பணிகொள்ள எனக்கொடுத்தோன் கொண்டுதான்

அணியும் கலம்பணிகொண்டு, இடம் அம்பலம்கொண்டவன் எனவரும் 54-ஆம் திருப்பாடலின் உரையில், ' தனக்குத் தக்க தையலே இடத்து வைத்தானென்றும், தன்னடியார்க் குத் தகாத என்னை அவர்க்குக் கொடுத்தானென்றும், அணிதற்குத் தகாத பாம்பை அணிந்தானென்றும், தனக்குத் தகும் அம்பலத்தை இடமாகக் கொண்டானென்றும் மாறு பாட்டொழுக்கம் கூறியவாரும் ' எனப் பேராசிரியர் அதன் பொருள் நயத்தினைப் புலப்படுத்தியுள்ளார். இதன்கண்

தன்னடியார்க்குத் தகாத என்னை என்ற குறிப்பு,

புகவேதகேன் உனக்கன் பருள்யான், என் பொல்லாமணியே தகவே என உனக்கு ஆட்கொண்ட தன்மை (திருச். 10) எனவரும் அடிகளது வாய்மொழியை யுளங்கொண்டு அவர் கருத்தினைப் புலப்படுத்தும் நிலையில் வரைந்த நுட்பவுரை

யாதல் காண்க.

1. திருவாசகம் - திருப்பொற்சுண்ணம் 7. 2. திருநாவுக்கரசர் தேவாரம் 5-97-2. 3. திருநாவுக்கரசர் தேவாரம் 4-112-7.