பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 25?

திருவாதவூரடிகள் தம்மை அருளால் ஈர்த்து ஆட்கொண் டருளிய சிவபெருமானை,

சுழியா வருபெரு நீர் சென்னி வைத்தென்னைத் தன்

தொழும்பிற் கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் (திருக்கோவை-261)

எனப் போற்றியுள்ளார். சுழித்துக்கொண்டு வரும் பெரிய (கங்கையாற்றின்) நீரைத் திருமுடியின்கண் வைத்துத் தன் அடிமைத்திறத்தின்கண் என்னை நீங்காத அருளால் நிலைக் கச் செய்த திருச்சிற்றம்பலவன் ' என்பது இதன் பொருளா கும். ' பரந்துவரும் பெரும்புனலை வேகம் தணித்துத் தன் சென்னியின்கண் வைத்தாற்போல, நில்லாது பரக்கும் நெஞ்சையுடையேனைத் தன்கண் அடக்கினன் என்பது கருத்து" என இத்தொடர்க்குப் பேராசிரியர் வரைந்த கருத்துரை,

' நில்லாத நீர்சடைமேல் நிற்பித்தானை

நினையா வென் னெஞ்சை நினைவித்தானை " (6–43–1)

எனவரும் திருத்தாண்டகத் தொடரை நினைப்பிக்கும் முறை யில் அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

திருவாதவூரடிகள் தாம் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையில் பாட்டுடைத் தலைவனுகிய தில்லைச்சிற்றம்பலப் பெருமானைப் பரவிப் போற்றிய தொடர்கள், அடிகள் அருளிய திருவாசகப் பனுவலை யொத்துக் கற்போர் நெஞ்சைக் கனிந்துருகச் செய்வனவாகும்.

ஐந்தாம் திருப்பாடலில், " அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன், தில்லைச்சிந்தாமணி, உம்பரார் அறியா மறையோன் " என அடிகள் இறைவனைப் போற்றியுள்ளார். " எனக்கு ஆபரணமும் அமிழ்தும் என்னுயிரும் ஆயவன் ; தில்லைக்கண் சிந்தாமணிபோல் அன்பர்க்கு நினைத்தவை கொடுப்போன் ; அன்பரல்லாத தேவர்கள் அறியாத அந்தணன்" என்பது இத்தொடரின் பொருளாகும். தன்னை அன்பினுல் வழிபடும் உயிர்கட்கு அழகு செய்தலால் அணி’ என்றும், கழிபெருஞ் சுவையோடு உறுதி பயத்தலுடைமை யால் 'அமிழ்து என்றும், காதலிக்கப்படும் பொருள்க ளெல்லாவற்றினும் சிறந்தமையால் ஆவி என்றும், இறைவனை உவமித்துக் கூறிய நயம் உணர்தற்குரியதாகும். ஈறிலின்பம் பயக்கும் இறைவனெடு சார்த்தி நோக்குங்கால் அணியும் அமிழ்தும் ஆவியும் மிகத்தாழ்ந்தனவாயினும்,

17