பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 263.

இதன்கண் சங்கந் தருமுத்தி யாம்பெற என்பது முதல் துங்கமலிதலை யேந்தலின் என்பது வரையுள்ள தொடர், தில்லை யிறைவனுக்கும் கடலுக்கும் பொருந்தச் சிலேடையாய் வந்ததாகும்.

சங்கு தரும் முத்துக்களை யாம்பெறப் பெரிய(உப்பங்) கழிகளைத் தான் பொருந்திப் பொங்கும் புனலையுடைய கங்கை யைத் தாங்கிப் பொலிந்த ஆரவாரத்தையுடைய பாறு ஆகிய மரக்கலங்கள் இயங்கும் அலைகளின் மிகுதியை யுடைத் தாகலின் எனக் கடலுக்கு ஏற்பவும்,

திருவடிக்கண் உண்டாகிய பற்றுத்தரும் முத்தியை யாம் பெறும்வண்ணம் எல்லாப் பொருளையும் அகப்படுத்தி நிற்கும் ஆகாயத்தையும் கடந்து நின்ற தான் ஒரு வடிவு கொண்டுவந்து பொருந்திப் பொங்கும் புனலையுடைய கங்கை யைச் சூடி, மிக்க ஆரவாரத்தையுடைய பாறு(பருந்து) ஆகிய பறவைகள் சூழ்ந்து நின்ற உயர்வுமிக்க தலையோட்டினை ஏந்துதலின் எனத் தில்லையிறைவனுக்கு ஏற்பவும் இரு வகையாகப் பொருள் கொள்ளும்படி இத்தொடர் சிலேடை யணி பெற அமைந்துளது. பெருநாணினளாகிய தலைவி, தோழிக்கு வெளிப்படையாக மறுமொழி கூருது, அவள் கூற்றினை யறியாதாள்போல் வேருென்று கூறிஞளாயினும், தான் கூறியதனைக் கேட்ட தோழி, இக்கூற்றில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து இணைத்துநோக்கினல் இதுவே அவளுக்குத் தான் கூறுதற்குரிய மறுமொழியாகவும் அமையும்படி கடலின்மேல் வைத்துக் கூறியுள்ளாள்.

முன்னர் நீ புரிசேர் சடையோன் புதல்வன் என்றும் பூங்கணைவேள் என்றும் உயர்த்துக் கூறியனவெல்லாம் அத் தலைவனுக்கு உரியனவே. அத்தகைய பெரியோன் தன்மாட் டுண்டான புணர்ச்சியான பேரின்பத்தை நாம் பெறுகை காரணமாக இவ்வாறு எளிவந்து உன்னை அடைந்து நின் ருன் , அஃது எதுபோலவென்ருல், பெறுதற்கரிய சங்கு தருகிற முத்தினை நாம் பெறுதல் எளிதாகக் கடலானது பெரிய உப்பங்கழியை வந்தடைந்தாற்போல; இனி உனக்கு வேண்டியது செய்வாயாக எனத் தலைவி தோழியை நோக்கிக் கூறிய மறுமொழியாகவும் அமையும் முறையில் அடிகள் இத்திருப்பாடலை அருளிச் செய்துள்ளமை அறிந்து மகிழத்தக்கதாகும்.