பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

பன்னிரு திருமுறை வரலாறு


நாணத்தாற் குறைநேர மாட்டாது வருந்தும் தலைமகள், என் தோழியாகிய இவளும் பெருநாணினள் ஆதலால் என்னைக்கொண்டே சொல்லச் செய்து பின் தலைவனது குறை முடிக்கக் கருதுகின்ருள். இதற்கு யான் ஒன்றும் சொல்லாமலிருந்தால் எம்பெருமான் இறந்துபடுவான் என உட்கொண்டு, தன் நாணத்தினை விட்டுப் பின்னும்

வெளிப்படக் கூறமாட்டாது, 'பாங்கற்கூட்டம் பெற்ற தலைவன் இப்பொழுது தோழியிற் கூட்டத்திற்குத் துவள் கின்ருன் என்பது தோன்ற, மாயவன்மேல் வைத்து

மறைத்துக் கூறுவதாக அமைந்தது,

புரங்கட ந் தானடி காண்டான் புவிவிண் டு புக்கறியா திரங்கிடெந் தாயென்றிரப்பத் தன்னிரடிக் கென்னிரண்டு கரங்கள் தந் தான் ஒன்று காட்ட மற்ருங்கதும் காட்டிடென்று வரங்கிடந்தான் தில்லையம்பல முன் றிலம் மாயவனே. (86) எனவரும் திருக்கோவையாகும். " மாயவகிைய திருமால், முப்புரங்களை வென்ற இறைவனுடைய திருவடிகள் இரண்டையுங் காணவேண்டி, நெறியல்லா நெறியால் நிலத் தைப் பிளந்துகொண்டு உள்ளே புகுந்து, காணுது, பின் அம்முதல்வனை வழிபட்டு, எந்தையே அருள் புரிதல் வேண்டும்' என இரந்து நின்று வேண்ட, தன் இரண்டு திருவடிகளையும் தொழுதற்கு என்னுடைய இரண்டு கைகளை யும் தந்தவனகிய இறைவன், சிறிது திருவுளமிரங்கி, ஒரு திருவடியைக் காட்டியருளினுளுக, மற்ருெரு திருவடியை யும் காட்டியருளுதல் வேண்டும் என்று தில்லையம்பலத் திருமுற்றத்தின் கண் வரம் கிடக்கின்ருன் ' என்பது இதன் பொருள். இன்னும் வரங்கிடக்கின்ருனுகலின் முன் கண்டது ஒன்றுபோலும் என்பது கருத்து.

" ஒன்று காட்ட மற்ருங்கதும் காட்டிடு, என்று மாயவன் தில்லையம்பல முற்றத்தே வரங் கிடந்தாற் போல, முன்னர்ப் பாங்கற் கூட்டம் பெற்ருளுகிய தலைமகன், பாங்கியாலாகிய கூட்டம் பெறுகை காரணமாக நின்னிடத்து வந்து குறையுரு நின்ருன் " எனத் தலைமகள் தோழிக்குத் தான் கூறும் மறு மொழியை வெளிப்படக் கூருது மறைத்துக் கூறினுள் என்றவாறு.

" புரங்கடந்தானடிகளைக் காணுமாறு வழிபட்டுக் காண் கையாவது, அன்னத்திற்குத் தாமரையும், பன்றிக்குக் காடு மாதலால் இவர் இங்ங்னம் தத்தம் நிலைப் பரிசே தேடுதல்,