பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை Żóš

இவ்வாறு தேடாது தமது அகங்காரத்தினன் மாறுபட்டுப் பன்றி தாமரையும், அன்னம் காடும் ஆகப் படர்ந்து தேடுத லாற் கண்டிலர். இது நெறியல்லா நெறியாயினவாறு ” எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தக்கதாகும்.

உடன்போக்கில் தலைவனுடன் சென்ற தலைமகளைத் தேடிக்கொண்டு சென்ற செவிலித்தாய், தன் மகளையும் அவள் காதலனையும் ஒத்தகாதற்கேண்மையினராய்த் தனக்கு எதிரே வந்த காதலர் இருவரைக் கண்டு அணுகி வினவின ளாக, அவ்விருவருள் தலைவன் அவளுக்கு மறுமொழி கூறிய நிலையில் விளுவும் விடையுமாக அமைந்தது,

மீண்டா ரெனவுவந்தேன் கண்டு நும்மை, இம்மேதகவே பூண்டாரிருவர் முன்போயினரே, புலியூரென நின் ருண்டான் அருவரை ஆளியன்னனைக்கண்டேன் அயலே துாண்டா விளக்கனை யாய் என்னையோ அன்னை சொல்லியதே (திருக்கோவை-24)

எனவரும் திருப்பாடலாகும். காதலராய் வரும் நும் இரு வரது தோற்றத்தைக் கண்டு, என்னுல் தேடப்பெறும் மகளும் அவள் காதலனும் ஆகிய அவ்விருவரும் மீண்டு வந்தார்கள் என்று கருதி மகிழ்ந்தேன். இவ்வாறு நும்மோடொத்த பெருமை வாய்ந்த இவ்வொழுக்கத்தையே பூண்ட காதலர் இருவர் இவ்வருஞ்சுரத்தில் முன்னே நடந்து சென்றனரோ உரைமின் எனச் செவிலி வினவுவதாக அமைந்தது, நூம்மைக் கண்டு மீண்டார் என உவந்தேன்; இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே ? என்ற தொடராகும். செவிலி கூறிய அம்மொழியைக் கேட்ட அத்தலைவன், “ புலியூர்க்கண் என்னை ஒரு பொருளாக மதித்து நின்று ஆண்ட இறைவனது கிட்டுதற்கரிய மலையில் சிங்கத்தினை யொப்பாளுகிய தலைவனை யான் கண்டேன் ' எனச் செவி லிக்கு மறுமொழி கூறியவன், தன் அருகே நின்ற காதலியை நோக்கி, தூண்ட வேண்டாத மணிவிளக்கினை ஒப்பாய், அத் தலைமகனது அயலே அன்னை சொல்லியது யாது ? அதனை அன்னைக்கு விளங்கச் சொல்வாயாக ' எனப் பணிக் கும் முறையில் அமைந்தது, ' புலியூர் என நின்று ஆண்டான் அருவரை ஆளி அன்னனைக் கண்டேன்; தூண்டா விளக்கு அனையாய், அயல் அன்னை சொல்லியது என்னையோ ? என்ற தொடராகும்.