பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

பன்னிரு திருமுறை வரலாறு


புணர்ந்துடன் வரும் தலைமகன் செவிலியை நோக்கிக் கூறியதாக அமைந்த இம்மறுமொழி, தன்னுற் காதலிக்கப் பட்ட மனைவி யொருத்தியை யன்றிப் பிறர்க்குரிய மகளிரைக் கண்ணுற் காணுதற்கும் எண்ணுத அவனது தூய நன்னெஞ் சத்தின் இயல்பினைப் புலப்படுத்துவதாய்க் கற்பினுக்கு அருங்கலமாய் அவனுடன் போந்த காதலியின் சிறப்பினையும் ஒருங்கு உணர்த்தும் நிலையில் அமைந்திருத்தல் காணலாம். தமிழ் இயல் வழக்கமாகிய அகத்தினையொழுகலாற்றில் தலைவன் தலைவியாகிய காதலர் இருவர்பாலும் அமைய வேண்டிய உயர்ந்த பண்புகளுள் நிறையும் கற்பும் ஆகிய இவை இன்றியமையாச் சிறப்பின என்னும் இவ்வுண்மை யினைத் திருவாதவூரடிகள் இத்திருப்பாடலில் தலைவன் கூற்றில் வைத்து விளக்கிய திறம் உணர்ந்து போற்றத் தக்கதாகும்.

திருவாதவூரிற் பிறந்த பொய்யாநாவின் அந்தணராகிய கபிலர் என்னும் புலவர் பெருமான், ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழியல் வழக்கமாகிய அகனைந்திணை யொழுகலாற்றின் சிறப்பினை யுணர்த்தற் பொருட்டுக் குறிஞ்சிப்பாட்டினைப் பாடித் தந்தது போலவே, திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவராகிய மணிவாசகப்பெருமானும் அகனைந்திணை யொழுகலாற்றினை ஒரு கோவையாகப் பாடித் தருக என வேதியர் வடிவில் வந்து கேட்டருளிய இறைவன் வேண்டிய வண்ணம் நானுறு துறைகளமையத் திருச் சிற்றம்பலக்கோவை யென்னும் இத்திருக்கோவையினை இயற்றியளித்தருளிய செய்தி இங்கு ஒப்பு நோக்கி எண்ணத் தக்க தனிச் சிறப்புடையதாகும்.

திருவாதவூரடிகள் அருளிய இத்திருச்சிற்றம்பலக் கோவையின் சொற்பொருட் சுவைநலங்களில் திளைத்த பிற்காலச் சான்ருேர்கள், அடிகள் அருளிய திருப்பாடற் பொருளைப் பின்பற்றி அகத்தினைச் செய்யுட்கள் பல இயற்றி புள்ளார்கள். அவ்வகையில் தோன்றிய அகத்திணை நூல்க ளுள் கி. பி. பதினெராம் நூற்ருண்டினையடுத்து வாழ்ந்த கல்லாடர் என்னும் புலவர் பெருமாளுல் இயற்றப்பெற்ற கல்லாடம் என்பதும் ஒன்ருகும். இந்நூல் நூறு செய்யுட்களை யுடையது. இந்நூலாசிரியர் திருச்சிற்றம்பலக்கோவையினுள் நூறு திருப்பாடல்களுக்குரிய நூறு துறைகளைத் தேர்ந்து கொண்டு ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் ஆசிரியப்பாவாக