பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 23#

து மு: ஆசிரியப் பாக்களால் இந்நூலைச் சுவைபெற இயற்றியுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிக்கத்தக்க தாகும்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சிஞர்க்கினியர் உரையில் மேற்கோளாகக் காணப்படும் செய்யுட்களிற் சில, இத்திருக்கோவையின் சொற்பொருளமைப்பினைத் தழுவி இயற்றப்பட்டனவாகத் தோன்றுகின்றன.

உடன் போக்கிற் செல்லும் தலைவன் தலைவி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காணும் விருப்பினுற் பின்னும் முன்னுமாக மாறி மாறிச் செல்லும் அழகிய தோற்றத்தினைக் கண்டோர் மகிழ்ந்துரைப்பதாக அமைந்தது,

அன்பனைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவனிடவன்றன் பின்பனைத் தோளிவரும் இப்பெருஞ்சுரஞ் செல்வதன்று பொன்பனைத் தன்ன இறையுறை தில்லைப்பொலி மலர்மேல் நன்பனைத் தண்ணற வுண்ணளி போன் ருெளிர்

நாடகமே. (2.19)

எனவரும் திருக்கோவையாகும். ' தலைமகளின் அழகிய முதுகினையும் அசை நடையினையும் காண விரும்பி ஆடவரிற் சிறந்தாளுகிய தலைவன் அன்பால் அனைத்து அழகிய சொல்லையுடையாளாகிய தலைவியின் பின்னே செல்கின்ருன். பசிய மூங்கில் போலும் தோளையுடைய தலைமகளோ அவ னுக்கு முன்னே செல்லுதற்கு நாணியவளாய், அவனது பீடு நடையினைக் காண விரும்பி அவன் பின்னே மெல்லச் செல்கின்ருள். இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் பின்னே செல்லுதலில் விருப்பமுடையராக நின்று நின்று பின் தங்கிச் செல்லுதலை நோக்கின் இவரது செயல் இப் பெரிய சுரத்தை விரைவிற் கடந்து செல்லுதற்கு ஏற்றதாகக் காணப்படவில்லை. இவர் தம் தோற்றம், பொன் ஒரு வடிவு கொண்டு தோன்றினுற் போலும் கூத்தப்பெருமான் எழுந் தருளிய தில்லையில் நல்ல மருத நிலத்திற் பூத்த மலர்களிலே குளிர்ந்த தேனைப்பருகிய வண்டுகளை யொத்து இன்பக்களி யால் மயங்கி விளங்குவதொரு நாடகம் போன்று கண் டார்க்கு இன்பஞ் செய்வதாயிற்று என்பது இத்திருப்பாட லின் பொருளாகும். இப்பொருளைத் தெளிய விளக்கும் நிலையில் அமைந்தது,