பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பன்னிரு திருமுறை வரலாறு


விளையுமோ என அஞ்சி மனங்கலங்கி மன்னனை யடைந்து வேந்தர் பெருமானே, நேற்று வந்த புதிய குதிரைகளைக் கண்ணுறக்கமின்றிக் காத்து வந்தோம். அவை நாங்கள் வைத்த உணவினையுட்கொள்ளாமல் நள்ளிரவிலே நரிபோல் உருப்பெற்றுக் குதிரை, மான், யானைக்கன்று, ஆடு, கோழி முதலியவற்றின் குடர்களைப் பிடுங்கித்தின்று ஊளையிட்டுக் கொண்டு எங்கள் கையிலகப்படாது ஓடிப்போயின எனக் கூறி முறையிட்டார்கள். அதனைக் கேட்ட பாண்டியன், மின்னமல் இடித்ததுபோல் இத்தகைய துன்பம் தேர்தற்கு எனது அரசியல் முறையில் ஏதேனும் தவறு நிகழ்ந்த துண்டோ ? அருளுடைய பெரியோர்க்கு யான் தீங்கிழைத்த துண்டோ என மனங்கலங்கினன். அத்தாணி மண்டபத்தை அடைந்து அமைச்சர்களை யழைத்து நள்ளிரவில் நிகழ்ந்த வற்றைக் கூறினன். அமைச்சர்கள் மறுமொழி கூற அறி யாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.

அப்பொழுது வாதவூரடிகள் நாட்கடன்களை முடித்துக் கொண்டு முகமலர்ச்சியுடன் பாண்டியனது பேரவையினே யடைந்தார். முகவாட்டத்துடன் இருந்த மன்னனை நோக்கி அரசே, இங்ங்னம் நின் முகம் வாட்டமுற். றிருப்பதேன்’ என வினவிஞர். அவ்வுரை கேட்ட பாண் டியன் அடிகளைச் சினந்து நோக்கி நீ நல்லறிவுடைய அமைச்சன். உன்னையொப்பார் யாருளர் ? நல்ல குதிரை களைத் தேடிக் கொணர்ந்தாய்' எனக் கடுகடுத்துரைத்தான். வாதவூரர் மனநடுங்கி அரசர் பெருமானே. சிறந்தனவாகத் தேர்ந்து கொண்டுவந்த குதிரைகளுள் ஏதேனும் பழு துண்டோ? அறிஞர் முன்னிலையிற் பழுதறக்கண்டு அக் குதிரைகளை நேற்றே ஏற்றுக்கொள்ளவில்லையா என வினவிஞர். பாண்டியன் வாதவூரரைச் சினந்து நோக்கி 'நீசிறிதும் அஞ்சாது என் முன்நின்று இவ்வாறு பேசுகின் றனையோ? நேற்று நீ கொணர்வித்த குதிரைகள் யாவும் நரிகளாகி நம்மிடத்திருந்த பழைய குதிரைகளையும் கடித்துப் பினமாக்கி ஊர்முழுதும் ஊளையிட்டுத் திரிகின்ற செய்தியைப் பித்தகிைய நீ உணர்ந்திலேபோலும். ஆசிரியர், அரசர், அந்தணர், அன்பிற்கினிய தோழர், அருந்தவத்தோர் ஆகிய வர்களை வஞ்சிப்பார்க்குக் கொலையையன்றி வேறு தண்ட மில்லை. நரிகளையெல்லாம் குதிரைகளாக்கிக் கொணர்ந்து எம்முடைய குதிரைப் பந்திகளிற் கட்டுவித்தாய். இவ்வாறு