பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை ః

படுத்தல் காணலாம். தெய்வத்தால் வகுக்கப்படும் முறையே பால் எனவும் வகை எனவும் ஊழ் எனவும் வழங்கப்படும். இந்நுட்பத்தினை,

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது ' (377) என்னும் திருக்குறளில் திருவள்ளுவர் தெளிவாகக் குறித் துள்ளார். ஊழ்வினை தானே வந்து வினைசெய்த உயிரைப் பற்றி நுகர்விக்கும் உணர்வும் ஆற்றலும் உடையதன்று என்றும், இயங்குதினை நிலைத்திணை ஆகிய எல்லாப் பொருள் களையும் ஓர் ஒழுங்குபட வகுத்து இயக்கி நிற்கும் இறை வஞல் வகுக்கப்பட்ட முறைமையாகிய நியதியே ஊழ் என வழங்கப்படுவதென்றும் தெளிவுபடுத்த எண்ணிய திரு வள்ளுவர், வகுத்தான் வகுத்த வகை என்ற தொடரால், ஊழ்வினையாவது இத்தன்மையதென விளக்கியுள்ளார். இத் தொடரில் வகுத்தான் என்னும் சொல் இறைவனைக் குறிப் பது. வகுத்த வகை என்றது, இறைவனல் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழினைக் குறிப்பதாகும் பகுத்தது பால் என வழங்கிற்ைபோல, வகுத்தது வகை என வழங்குவதாயிற்று. தொல்காப்பியருைம் திருவள்ளுவரும் முறையே இறை வனைப் பற்றியும் ஊழைப்பற்றியும் கூறிய இக்கருத்தினை, * யாழின் மொழி மங்கைபங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த

ஊழின் வழியதொன் றென் இன (திருக்கோவை-350) எனவரும் தொடரில் திருவாதவூரடிகள் தெளிவாக விளக்கி யுள்ளமை உணர்ந்து மகிழத்தக்கதாகும். இதன் கண் ஊழிற் பெருவலியாவுள' (380) எனவரும் திருக்குறட் பொருளும் எடுத்தாளப்பட்டுள்ளமை காணலாம்.

முன்னைப் பிறப்பிற் பழகியவர்களை இப்பிறப்பிலும் முன் போல் ஒன்றுவிப்பதும் அன்றி வேறுபடுத்துப் பிரித்து வைப்பதும் எனப் பால் (ஊழ்) இருவகைப்படும் என்பதும், ஒன்றுவிக்கும் திறத்தால் உயர்ந்த ஊழின் வழியே நிகழும் இறைவனது ஆணையால், உருவும் திருவும் முதலிய நலங் களால் ஒத்த தன்மையினராகிய தலைவனும் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்பட்டு அன்பினல் ஒன்றுபடுவர் என்பதும் ஆகிய உண்மையினை,

ஒன்றே வேறே யென்றிரு பால் வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப (தொல்-களவு-2)